Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது
- |ஏப்ரல் 2010|
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan'நோயாளிப் பாதுகாப்பு மற்றும் பெறத்தக்க கவனச் சட்டம்' (The Patient Protection and Affordable Care Act), அதிபர் ஒபாமாவின் கையெழுத்தைப் பெற்று நிறைவேறியது. பரவலாக 'மருத்துவச் சீரமைப்புச் சட்ட வரைவு' என்று இதுவரை அறியப்பட்டதாகும் இது. “மருத்துவம் என்று வருகையில் எல்லோருக்கும் அடிப்படைப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற ஆதார லட்சியத்தை உள்ளடக்கிய சட்டம் இது” இது என்று வர்ணித்தார் ஒபாமா. இதில் கையெழுத்திட மொத்தம் 22 பேனாக்களை அவர் பயன்படுத்தினார் என்பதும் ஒரு சுவாரசியமான தகவல். இது கையாழுத்தாகும் பொழுது உடனிருந்தவர்களில் பதினோரு வயதுச் சிறுவன் மார்செலாஸ் ஓவென்ஸ் ஒருவன். அவனது தாயார் கானி ஆண்டர்ஸன் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இறந்து போகவே அவன் இந்தச் சட்டத்தின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவன் ஆனான். பலவகை எதிர்ப்புகளையும் சமாளித்து இதனை உறுதியோடு நிறைவேற்றிய ஒபாமாவின் தலைமைப் பண்பும் அவரது ஜனநாயகக் கட்சித் தோழர்களின் ஆதரவும் பாராட்டுக்குரியது. இனியாவது 'எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு' என்பதை இந்தச் சட்டம் சாத்தியமாக்க வேண்டும். காப்பீட்டுக் குழுமங்கள் இதற்கான, விலை குறைந்த காப்பீட்டுத் திட்டங்களை புத்தாக்கம் செய்ய வேண்டும்.

***


அமெரிக்காவின் பலமே அதன் புத்தாக்கத் திறம்தான். ஆனால், பணம்படைத்த, செல்வாக்குள்ள பெருவணிக நிறுவனங்கள் 'லாபியிங்' என்ற உத்தியால் அரசின் கவனத்தைத் திசைதிருப்பி விடுவது வருத்தம் தருவதாக உள்ளது. அரசு இதன் இழுபறிகளை அசட்டை செய்து, தனது லட்சியத்தில் உறுதியாக நின்று, சிறிய வணிக நிறுவனங்களின் புத்தாக்கத் திறத்தைத் தூண்டி விடுவது அமெரிக்காவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எரிபொருள் திறன் தகுதரப்படுத்தலை (fuel efficiency standards) ஒத்திப்போட நினைத்த அமெரிக்கக் கார் தொழில்துறை லாபியிங்கை மட்டுமே நம்பியதால் நசித்துப் போனது. அவ்வாறல்லாமல் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் போட்டியின் காரணமாக மருந்து விலைகள் குறையும் என்பதை உணர்ந்து நடந்து அமெரிக்க மருந்து உற்பத்தித் துறையோ சமாளித்துவிட்டது. மாற்று ஆற்றல் கண்டுபிடிப்பு, அகலப்பட்டை இணையத் தொடர்பு (broad band), நிதித்துறைச் சீரமைப்பு ஆகியவையும் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு பதில் செனட்டர்களைக் கையாண்டால் போதும் என்று நினைப்பதால் தேங்கிக் கிடக்கின்றன. தேக்கமும் வீழ்ச்சியும் நெருங்கிய உறவினர்கள். நாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னால் சீனா போன்ற சூட்டிகையான நாடுகள் வெகுதூரம் முன்னால் போய்விடும். வணிகக் குழுமங்களும், வெவ்வேறு தனி நோக்கம் கொண்டவரும் 'லாபி' செய்வதற்கான நிதி மற்றும் நாள் வரம்புகளை நீக்கி அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்புச் சொல்லியிருக்கும் நிலையில் இதுகுறித்துப் பொதுமக்களும், ஆளும் கட்சியினரும் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகிறது.

***
அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (US Census) ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு படிவத்தை அனுப்பியுள்ளது. அதில் கேட்டுள்ளபடி பெயர், வயது, பால், இனம் போன்ற தகவல்களைச் சரியாக நிரப்பி, குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வையுங்கள். அப்போதுதான் அமெரிக்காவில் இருக்கும் நம்மவரைப் பற்றிய சரியான புள்ளிவிவரம் அரசின் கைவசம் இருக்கும். இந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இருக்கும். இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்புவது நமது கடமை. தவறாமல், குறித்த காலத்தில் செய்யவேண்டும்.

***


'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' போன்ற இலக்கியச் சுவையும் பக்திச் சுவையும் ஒருசேரக் கலந்த, 6000க்கு மேற்பட்ட, அழகிய பாடல்களை எழுதியவர் கவிஞர் பூவை செங்குட்டுவன் . அவரது நேர்காணல் இந்த இதழை அணி செய்கிறது. தனக்குக் குறுகிய காலப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டதால் பெற்ற அனுபவம் விஜி திலீப்பைப் பிற பார்வையற்றோருக்குப் படிக்க வழி செய்ய வேண்டும் என்ற முனைப்பை ஏற்படுத்தியது. அந்த முயற்சியின் தீவிரம் அத்தகையோருக்கு உதவும் 'புக்‌ஷேர்' (BookShare.org) அமைப்பின் பன்னாட்டு நிர்வாகியாக அவரை உயர்த்தியது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கிய விஜி திலீப் என்ற சாதனைப் பெண்மணியையும் இந்த இதழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இவை தவிர நூற்றாண்டு விழாக் காணும் டாக்டர் சி. இலக்குவனார் பற்றிய கட்டுரை, கதைகள், துணுக்குகள், சமையல் குறிப்பு, நகைச்சுவைக் கவிதை எனப் பல வண்ணமயமான அம்சங்களோடு உங்களை வந்தடைகிறது இந்த இதழ்.

வாழ்த்துகளுடன்...


ஏப்ரல் 2010
Share: 
© Copyright 2020 Tamilonline