Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஆகஸ்டு 2009 குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeகுறுக்கெழுத்துப் புதிரமைக்கவும் விடைகள் கண்டுபிடிக்கவும் நிறைய அறிவு தேவை என்பது முழுதும் சரியில்லை. நம்மைவிட நிறைய விஷய ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள், அதானல் நமக்கு இது ஒத்துவராதென்று ஒதுங்கவேண்டாம். வெட்கப்படாமல் கொஞ்சம் விசித்திரமாக யோசிக்கத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். போன மாத விடைகளில் சில சொற்களைக் கொண்டு பின்வருமாறு ஒரு வாக்கியம் அமைத்துள்ளேன்: "தான் விரும்பிய வழி சென்று பங்குச் சந்தையில் தாராளமாக விளையாடி வாழ்க்கையில் முத்திரை பதிக்க கிளை மேலாளர் அனுமதிக்கவில்லையென்று அரளி விதையை உண்டு உயிர் துறந்து பரமபிதாவையடைந்தவன் ஆத்மா சாந்தியடைய அரை நிமிடம் மௌனமாக இருப்போம்." இதுபோல் கப்ஸா அடிக்கத் தயாராக இருப்பதால்தான் நான் அரைகுறை அறிவுடன் இத்தனைநாள் புதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதுபோல் வாக்கியங்களை அமைக்கும் விளையாட்டை ஆடிப்பாருங்கள்.

குறுக்காக
3. பருத்தியில் காண்பதை விஷப்பாம்பஞ்சுகிறவனிடம் காணலாம் (3)
5. நிறைய சம்பாதிக்க இங்கே ஓடச் சொல்லும் பழமொழி (5)
6. (இருமுறை) பூசம் விசேஷமாகும் சமயத்தில் குதிக்கும் விதம் (2)
7. வரையறுக்கப்பட்ட அளவு உமட்டும் கதையைக் கேட்கும்போது கொட்டுவதை மறந்துவிடு (3)
8. வரி கட்டாதவன் தொங்கியது இங்கே (5)
11. அரசரும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சக்தியைத் திரட்டிப் பொதுவாகப் பார்க்கும் இடம் (5)
12. மோசமானவன் முன்னேயிருப்பவன் இறைவன் எழுந்தருளிய இடத்தில் பாதி (3)
14. அளவை மீறா அம்மி காற்றில் மூழ்கியிருக்கும் (2)
16. புதிய மலர்ச்சியை எய்ய பொறியலில் இரண்டை நீக்கி வடை போட்டுப் புரட்டவும் (5)
17. ஒன்றிரண்டு மூன்று விதமாகக் குறவஞ்சியை மெல்லிசையாய்ப் பாடத் தெரிந்தவள் (3)

நெடுக்காக
1. சிக்கலான தன்மைக்கு முன்பே மரியாதையளி அதுதான் அறிவுக்கூர்மை (2,4)
2. வெளி ஆடம்பரம் மெய்யின்றி எமனோடு வரும் (3)
3. ஒரு மருத்துவத்துறை இசைக்கருவி? (5)
4. சுண்ணாம்பிலானதை ஓரங்களால் சிலைகள் செய்வர் (2)
9. தயவோடு காட்டப்படும் பரிவு (6)
10. கோவலன் வறுமையடையும் வரை வீட்டில் கேட்டது (5)
13. பெற்ற குழந்தையை வளர்க்காதவள் தேர்தல் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்து (3)
15. பற்றை விட்டவர்க்கும் வெற்றிலைமேல் பற்றை விடாதவர்க்கும் அடையாளம் (2)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com
ஜூலை 2009 விடைகள்:
Share: 
© Copyright 2020 Tamilonline