Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | சிறப்புப் பார்வை | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | Events Calendar
எழுத்தாளர் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அம்மா - உலக அன்னையர் தினம்
நிக்கோட்டின் அபாயம்
புகையை விரட்டிய தீர்ப்பு
மேற்கத்திய இசைக்கருவியில் கர்நாடக இசைவிருந்து
- |மே 2001|
Share:
Click Here Enlargeகடல் கடந்து வந்து அமெரிக்காவில் பணிபுரிந்தாலும் இந்திய மாணவர்கள் நாட்டுப்பற்றை மறந்துவிடவில்லை. பின் தங்கியுள்ள நிலையில் வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டுப் பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் 'அரசு சார்பில்லாத நிறுவனங்களுக்கு (Non Governmental Organization) நிதி உதவியும் பிற உதவிகளையும் செய்து வரும் இந்திய இளைஞர்கள் நிறுவியுள்ள சங்கம் "இந்தியா வின் முன்னேற்றத்திற்கான சங்கம்" (Association for Indian's Development") என்றழைக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில் 'மேரிலாண்ட் காலேஜ் பார்க்'கில் இநதிய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் இன்று உலகில் 25 கிளைகளைக் கொண்ட ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.

வளைகுடாப் பகுதியின் கிளையைச் சேர்ந்த துடிப்புள்ள இநதிய இளைஞர்கள் இப்பகுதி வாழ் இந்தியர்களின் இசையார் வத்தை நாடிப் பிடித்துத் தெரிந்து வைத்துள்ளனர். எனவே தங்க ளுடைய திட்டங்களுக்கான நிதி யைத் திரட்டும் பொருட்டு, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஒரு இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர்.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டிலும் தேர்ச்சி பெற்றுள்ள அகில உலகப் புகழ் "பிரசன்னா" மேற்கத்திய இசைக் கருவியான 'கிதார்' வாத்தியத்தில் கர்நாடக இசை வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்த இளைஞர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

பத்து வயதில் கிதார் வாசிக்க ஆரம்பித்த தமிழ்நாட்டு இளைஞர் பிரசன்னா முப்பது வயதுக்குள்ளாகவே அனைத்துலகப் புகழ்பெற்ற இசை மேதையாக விளங்குவது நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய ஒன்றாகும்!

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கப்பர்லி தியேட்டரில் மாலை 7 மணிக்கு கச்சேரி தொடங்கியது. பிரசன்னாவின் கிதாருக்கப் பக்க வாத்தியமாக இலஷ்மண் மகாதேவன் அவர்களின் மிருதங்கம் சிறப்பாக அமைந்தது. காலஞ்சென்ற பாலக்காட்டு மணிஅய்யரின் மகன் T.R. இராஜாமணியிடம் பயிற்சி பெற்றுள்ள இலஷ்மணன் பிரபலமான பல இசைக் கலைஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ள பெருமைக்குரியவர்.

மறைந்த இசைமேதை ஜி.என். பால சுப்ரமண்யம் இயற்றியுள்ள ஆந்தோனிகா இராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து தீக்ஷ¢தரின் மஹாகணபதிம் நாட்டையில் கம்பிரமாக ஒலித்தது. அபூர்வ ராகங்களில் ஒன்றான பூதமனோகரியில் முத்தையா பாகவதரின் 'சமயமிதே' என்ற கீர்த்தனையும், அடுத்ததாக, தீக்ஷ¢தரின் நவாவர்ண கீர்த்தனையில் சங்கரர் பாண இராகத்தில் அமைந்த கமலாம்பா இராக ஆலாபனையுடனும் மிருதங்கத்தின் தனி ஆவர்த்தனத்துடன் சிறப்பாக அமைந்தது.
இடைவேளைக்குப்பின் மீண்டும் தொடங்கிய பிரசன்னா சிந்துபைரவியில் புரந்ததாசரின் 'வெங்கடாசல நிலையம்' வாசித்தபோது அரங்கத்தில் இருப்பவர்களை வெங்கடாசலபதிக்கு முன்னாலே கொண்டுபோய் நிறுத்தி விட்டதுபோல் மெய்ம் மறக்க வைத்தது. தஞ்சாவூர் சங்கரய்யரின் ரேவதி ராக மஹாதேவ சிவசம்போ" வேத ஒலியின் நாதம் போல் எதிரொலித்தது. அன்னமாச்சாரியாரின் 'பிரம்மமொகடே' பெளனி இராகத்தில் வாசித்தபோது 'தந்தன்னா தா¨னா' என்று எல்லோருடைய கைகளும் தாளபோட வைத்து கரகோஷம் எழுப்பியது. இறுதியாக தீக்ஷ¢தரின் 'சக்திசக்ஷ¢த கணபதிம்' மேற்கத்திய இசை கேட்பது போன்று அவையைக் கிறங்க வைத்தது.

ஒவ்வொர்பாடலையும் வாசித்து முடித்த போதும் எழுந்த கரவொலியே நீண்டநேரத்தை எடுத்துக் கொண்டதால் 9.30 மணிக்கு முடிந்திருக்க வேண்டிய கச்சேரி 10.15 மணி வரை நீண்டது வளைகுடா இந்தியர்களின் இசை ஈடுபாட்டை எதிரொலித்தது.

கச்சேரியின் அனுமதிக்கட்டணம் 5K மற்றும் அரங்கில் திரட்டப்பட்ட 5K ஆக பத்தாயிரம் டாலர் என்று பிரசன்னா இசை விருந்து பெருத்த நிதியைத் திரட்டித் தந்து இளைஞர்களுடைய உழைப்பிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இசைவிருந்து உதவிய நிதி நல்ல திட்டங்களுக்குப் பயன்படுவதில் நமக்கும் பெருமைதானே!!!!
More

அம்மா - உலக அன்னையர் தினம்
நிக்கோட்டின் அபாயம்
புகையை விரட்டிய தீர்ப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline