Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
பயணம்
வாசகிக்காக ஊர்வலம் போகும் தென்றல்!
- சரவணன்|மார்ச் 2002|
Share:
வாசகி அம்புஜவல்லி தேசிகாசாரி அவர்களுக்காக தென்றல் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இந்த முறை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர், தமிழகத்தின் தூங்கா நகரம் என்றெல்லாம் நினைவுகூரப்படுகிற மதுரை நோக்கி...

அவர் குறிப்பிட்டிருந்த இடம்: ஓ.சி.பி.எம் பெண்கள் மேனிலைப் பள்ளி (Orlanda Childes Pierce Memorial High Scholl), தல்லாகுளம், மதுரை.

அவர் குறிப்பிட்டிருந்த காலம்: சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு

"அந்த நாள் ஞாபகம்! இன்று வயது முதிர்ந்து கடந்த காலத்தின் நினைவலைகளில் நீந்துவதில் மிக்க இன்பம் காண்கிறேன். மணவாழ்வின் ஆரம்பம் மாமதுரை நகர் வாழ்வின் இறுதியா யிற்று. மக்களை முன்னிட்டு விரிகுடா வாசியாகி யுள்ள எனக்கு இன்றும் தாய்மண்ணை நினைக் கும் போதெல்லாம் என் கல்வித் தொட்டிலாம் என் அருமை ஓ.சி.பி.எம் என் நினைவை விட்டு அகலவே அகலாது" என்று அம்புஜவல்லி தேசிகாசாரி ஆழ்ந்து புகழ்ந்து எழுதிய பள்ளி இன்று எப்படியிருக்கிறது?

பழைய பெருமைகளைத் தனக்குள் அடக்கி பரந்து விரிந்து கிளைபரப்பி பிரம்மாண்டத்தைத் தோற்றுவிக்கும் ஆலமரம் போல, மதுரை தல்லாகுளம் பகுதியில் கட்டிடங்களும் மரங்களும் நிறைந்து பசுமையாய் வீற்றிருக்கிறது ஓ.சி.பி.எம் பெண்கள் மேனிலைப் பள்ளி (Orlanda Childes Pierce Memorial High Scholl).

தல்லாகுளம் பகுதியின் லேண்ட் மார்க்கே ஓ.சி.பி.எம் பள்ளிதான் என்று அம்புஜவல்லி குறிப்பிட்டிருந்தது முற்றிலும் உண்மையிலும் உண்மை. மதுரை பேருந்து நிறுத்தத்திலிருந்து பள்ளியின் வாசல் வரை வசிக்கும் அனைவருக்கும் பள்ளியின் பெருமைகள் தெரிந்திருக்கிறது. யாரிடம் வழி கேட்டாலும், உடனடியாக பள்ளியின் வழி நோக்கி நம்மை ஆற்றுப் படுத்துகிறார்கள்.

ஆற்றுப்படை நாயகனான பாணன் போல பள்ளிப் பெருமைகளைப் பாடி உணர்த்த பயணம் தொடங்குவது மிகவும் இனிமையான அனுபவம். பாசத்தையும் அக்கறையையும் ஒருங்கே தன்னகத்தே அடக்கிய மதுரை வட்டார மொழி காதுகளை இசையாய் வருட, அரை மணிநேர நடை பயணத்தை அடுத்து பள்ளியை அடைய முடிகிறது.

வழக்கத்துக்கு மாறாக பள்ளிச் சூழ்நிலைக்கு முற்றிலும் அன்னியமான நிலையில் பனைமரங்கள் வரிசையாய் பள்ளியின் முகப்பு வாயிலிலிருந்து கடைசி வரை நீண்டு நிற்கின்றன. பனை மரங்களைப் பார்க்கையில், அம்புஜவல்லி கிளித்தட்டு விளையாடிய மற்றும் பனைமரச் சிராய்ப்புகளைப் பெற்ற அனுபவத்தை எழுதியி ருந்தது மீண்டும் நியாபகத்துக்கு வந்தது. நீண்டு நிற்கும் அந்தப் பனை மரங்கள்தான் அந்தப் பள்ளிக்கு மேலும் கம்பீரம் சேர்க்கின்றன என்று சொன்னால்கூட அது மிகையாகாது!

அமெரிக்க மிஷனரிகளின் கூட்டு அமைப்பாள ராக இருந்த அல்டென் ஹெச் கிளார்க் என்பவரால், 1936-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஓ.சி.பி.எம் பெண்கள் மேனிலைப் பள்ளிக்கான (Orlanda Childes Pierce Memorial High Scholl) அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு வருடம் அயராத உழைப்பைச் செலுத்தி கட்டடம் உருவாகி, செல்வி. கேட்டி வில்காக்ஸ் என்பவர் தலைமையில் அவரை நிர்வாகியாகக் கொண்டு 1938-ஆம் ஆண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தத் தல்லாகுளம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக அமெரிக்க மிஷனரிகளால் அறியப்பட்டிருந்தது. இங்குள்ள குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாத வகையில் இருந்ததைப் போக்கும் விதத்தி லேயே இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் அதே கம்பீரத்தோடு நிமிர்ந்து நின்று செல்வி. கேட்டி வில்காக்ஸின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

1964-ஆம் ஆண்டு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து பள்ளி பல வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தீட்டிச் செயல்படுத்தியுள்ளது. சி.எஸ்.ஐ மதுரை இராமநாதபுரம் திருமண்டலம் பள்ளியைத் தற்போது நிர்வகித்து வருகிறது. இந்தத் திருமண்டலத்தைச் சேர்ந்த பிஷப் தவராஜ் டேவிட் ஏம்ஸ் இந்தப் பள்ளியின் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருகிறார். பள்ளியின் தாளாளராக மிஸஸ் நான்சி டேவிட் பணிபுரிந்து வருகிறார். திருமதி சுதந்திராதேவி ராமர் பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியை. இவர் மத்திய மற்றும் மாநில சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

பார்வையற்றோர் ஒருங்கிணைப்புத் திட்ட மொன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 3 சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கீழ் 22 பார்வையற்ற மாணவி யரும் 2 காது கேளாத மாணவியரும் கல்வி கற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 29 மாணவிகளை வைத்து 'செல்வபாய் டேவிட் ஹோம்' என்ற சிறப்பு விடுதி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். பார்வையற்ற, காது கேளாத, நடக்க இயலாத மாணவிகளுக்கு வாழ்க்கையில் ஒளியூட்டும் விதமாக அமைந்துள்ள இவர்களது செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர் கின்றன.

சாரணர், திரிசாரணர், நாட்டு நலப் பணித் திட்டம், சுற்றுப் புறச் சூழ்நிலைக் குழு என்று படிப்பு மட்டுமல்லாமல், மாணவிகளிடையே சமூகச் சீர்திருத்த எண்ணங்களை விதைக்கும் விதமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் மனித வள மேம் பாட்டுத் துறை வெளியிட்ட ஒரு ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்து 'சுற்றுப்புறச் சூழல் கல்வியில் இன்றியமையாத கற்றல்கள்' என்ற தலைப்பில் வெளியிட்டு அதை தமிழக மெங்கும் பரவச் செய்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளில் இப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மாநில, தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். FM Communication Safe-Gate என்ற பிரிவின் கீழ் ஓ.சி.பி.எம் பள்ளியை தென்னக ரயில்வே துறை மாதிரிப் பள்ளியாகத் தேர்தெடுத்துள்ளது.

68 வருடங்கள் நிறைவு பெற்ற இப்பள்ளியில் தற்போது 5304 மாணவிகள் பயில்கின்றனர். வெளியூரிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் வகையில் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. 120 அசிரியர்களும் 50 அலுவலகப் பணியாளர்களும் இணைந்து பணியாற்றி பள்ளியைச் சிறந்த நிலைக்குக் கொண்டு வரப் பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவி களைத் தயார்படுத்தும் விதமாக கணனிக் கல்வியும் அளிக்கப்படுகிறது. 20 கம்யூட்டர் களுடன் மிகப் பெரிய அளவில் இதற்கான அறையொன்றும் கட்டப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கணனிக் கல்வி வழங்கப்படுகிறது. மாணவியர்களின் இறை பண்பை வளர்க்கும் விதமாக பள்ளியினுள்ளே தேவாலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து தங்கிப் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்புஜவல்லி குறிப்பிட்டிருந்த பள்ளிப் பாடலை தினமும் காலையில் பிரார்த்தனை நேரத்தின் போது பாடிவிட்டே அடுத்த வேலை யையே ஆரம்பிக்கின்றனர். வாரம் தோறும் தவறாமல் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடை பெறுகின்றன. மகாகவி பாரதி சொன்னதைப் போல மாலையானதும் நல்ல விளையாட்டுக் கல்வியும் அளிக்கப்படுகிறது.

பல தடைகளையும் இடர்ப்பாடுகளையும் தாண்டி இன்று வளர்ந்த நிலையில் இருக்கிற இப்பள்ளியில் மாணவியரைச் சேர்க்க போட்டோ போட்டியே நடக்கிறது. "ஒவ்வொரு ஆண்டும் நிறையப் பேர் பள்ளியில் தங்களுடைய பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வருகிறார்கள். ஆனால் எங்களால் குறிப்பிட்ட அளவுக்குத்தான் எடுக்க முடிகிறது. மதுரையில் நிறையப் பள்ளிகள் இருந்தாலும் ஓ.சி.பி.எம்-இல் படித்தவர் என்றால் அதற்கு தனி மதிப்புதான். ஒவ்வொரு வருடமும் பள்ளியைப் புதுப்பித்துக் கொண்டே வருகிறோம். புதுப்புது கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. எங் களது பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் பரிசுகள் பலவும் பெற்றுள்ளனர். நல்ல தரமான கல்வியும் அளிக்கப்படுகிறது. இன்னும் தமிழகத் திலேயே மாதிரிப் பள்ளியாக எங்கள் பள்ளியை உயர்த்திக் காட்டுவோம்" என்று நம்பிக்கை யுடன் பேசுகிறார் பள்ளியின் தலைமையா சிரியை சுதந்திராதேவி ராமர்.

அம்புஜவல்லி தேசிகாசாரியின் ஒவ்வொரு வரிகளையும் மனதிற்குள் நிறுத்தி, பள்ளியைச் சுற்றி வரும் போது அவரின் இளமைக் காலம் நம் கண் முன்னர் விரிகிறது. பசுமையான இந்தப் பள்ளியில் அவரும் அவர் தோழிகளும் பட்டாம் பூச்சிகளாய்ச் சுற்றித் திரிந்ததை மனசுக்குள் படமாய்க் கொண்டு வருகையில், இனம் புரியாத சந்தோசம் வந்து மின்னி மறைகிறது. ஒரே யொரு கணம் மின்னலென வந்து மறையும் இந்தச் சந்தோசத்திற்காக எதை வேண்டுமா னாலும் இழக்கலாம் என்றே பள்ளியை விட்டு வெளியே வரும் போது தோன்றியது. n

******
அம்புஜவல்லி எனக்கு சீனியர்!

அம்புஜவல்லி ஐம்பதாண்டுகள் கழிந்த பின்னரும் இன்னும் அவர் படித்த பள்ளியை நினைவில் வைத்து அதை வெளிக்காட்டியிருப்பதை அறிகையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நிறையப் பேர் படித்து முடித்த அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளா கவே தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடுவர். ஆனால் அம்புஜவல்லியை நினைக்கையில் உண்மையிலேயே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இங்கு படித்திருக்கிறார் என்றால், எனக்கு அவர் சீனியராக இருப்பார் என்று நினைக்கிறேன். நானும் ஓ.சி.பி.எம் பள்ளியில் படித்த பழைய மாணவிதான். இங்கு படித்து இங்கேயே தலைமையாசிரியையாகவும் பணியாற்ற எனக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் இந்தப் பள்ளியில் 1958-இலிருந்து 1960 வரை படித்தேன். சிறந்த ஆசிரியைக்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளேன்.

இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது ஒரேயொரு கட்டிடத்தில் வைத்து ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் இப்போது மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக உருவெடுத்திருக்கிறது.

மாணவிகளின் கல்வியில் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தியிருக்கிறோம். நான் இந்த ஆண்டு ஓய்வு பெறப் போகிறேன். ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏதாவது இந்தப் பள்ளிக்குச் செய்து தர வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

அம்புஜவல்லி மிஸ்.ஜேகப், மிஸ்.ஏ.கே. ஜேம்ஸ், ஸ்டெல்லா சாலமோன் ஆகியோரைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருப்பது என்னை வியப்பிலாழ்த்துகிறது. இவர்கள் மூவரும் எனக்கும் ஆசிரியைகளாக இருந் துள்ளனர். சமீப காலத்துக்கு முன்புதான் மிஸ்.ஜேகப் மற்றும் மிஸ்.ஏ.கே.ஜேம்ஸ் இருவரும் இறைவனடி சேர்ந்தார்கள். ஸ்டெல்லா சாலமோன் இப்போது எங்கிருக் கிறார் என்று தெரியவில்லை. கணக்கில் ஏ.கே.ஜேம்ஸைப் புலி என்றுதான் சொல்ல வேண்டும். கணக்கில் இவர் புலியென்றால் ஆங்கிலத்தில் ஜேகப் சிங்கம். இந்த ஆசிரியைகளிடமெல்லாம் படித்ததால்தான் இன்று நாங்கள் நல்ல நிலைமையிலிருக் கிறோம். (அம்புஜவல்லியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)

என்னுடைய சீனியரான அம்புஜவல்லி இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து சிறப்புப் பெறவேண்டு மென்று நான் கர்த்தரைப் பிரார்த்திக்கிறேன். அவர் என்றாவது ஒருநாள் மதுரைப் பக்கம் வந்தால், கண்டிப்பாக பள்ளிக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

திருமதி. சுதந்திரா தேவி ராமர்
தலைமையாசிரியை,
ஓ.சி.பி.எம் பெண்கள் மேனிலைப் பள்ளி.

******


ஒற்றை வரியாய் அம்புஜவல்லி குறிப்பிட்டிருந்த பாடல் அவருக்காக முழுமையாய்...

come join in singing set echoes rioging
in loyal prise of pierce high shool
loyal devation, love, price and honour
for her dear name our hunts will rule
stotely palms unbending
grateful shodows lending
watch over us at work and play
sunset colours I glowing
Glory wide bestowing
leave a blessing at the close of day
Friendships formed new will not pass away
in one heats they will for ever stay
of our country here we'll learn to live
And to it our wenthy service give

சரவணன்
Share: 
© Copyright 2020 Tamilonline