Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
வார்த்தை சிறகினிலே
பரிசுப் பொருளை ஏற்கமாட்டேன்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeநான் எந்தப் பரிசுப் பொருளையும் ஏற்கமாட்டேன். எனது இரண்டு சூட்கேசுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனத்திலிருந்து நான் வெளியேறுவேன்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பதவிக் காலத்தின் இறுதி நாட்களில்

*****


தமிழ்நாட்டுல தமிழ் பேசினால் ஆச்சரியப்படறாங்க. நான் எங்கே போனாலும் என்னை பார்க்கிறவங்கல்லாம் எப்படித் தொடர்ந்து ஒரு மணி நேரம் தமிழ்ல பேச முடியுதுன்னு ஆச்சர்யமா கேக்குறாங்க. எதிர்வீட்டுக் குழந்தைக்கு தமிழ்ப் பாடத்துல டவுட்னா அக்காகிட்ட கேட்டுக்கோன்னு என்கிட்ட அனுப்பிடுறாங்க. தமிழ் நிகழ்ச்சியில் தமிழில் பேசிப் பிரபலமாகியிருப்பது நானாகத்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்.

கார்த்திகா, மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்

*****


மு.க. அழகிரியும், தி.மு.க.வும் இல்லாதிருந்தாலும் கூட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்.

*****


கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.கவுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.கவுக்கு. பாம.க.வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்.

டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்

*****


எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது.

மு. கருணாநிதி, ராமதாஸ் தொடர்ந்து வெளியிட்டுவரும் குற்றச் சாட்டுகளைப் பற்றி

*****
நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா, திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்

*****


ஓர் இலக்கியப் படைப்பாளிக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்துக்கும் இடையில் ஒரு சூட்சுமமான ஓர் உறவு இருக்கிறது. அந்த உறவுக்கு யார் அதீத விழிப்புடன் இருக்கிறானோ அவன் மிகப் பெரிய கலைஞனாகிறான் என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம்.

எம்.டி. முத்துக்குமாரசாமி, எழுத்தாளர்

*****


அவர் (மவுண்ட்பேட்டன்) அவளை (எட்வினாவை) அப்படிப் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளை அவர் தூக்கியெறியப் போவதில்லை. 'நீ போய் பிரதம மந்திரியின் காதலியாகிவிடு, உன் தலையீடு எனக்கு அவசியம்' என்று அவளிடம் அவர் சொல்லவில்லை. ஓர் ஆழமான உறவின் பக்கவிளைவு அது...

பமீலா ஹிக்ஸ் சீமாட்டி, லூயி மற்றும் எட்வினா மவுண்ட்பாட்டனின் மகள், ஜவஹர்லால் நேருவுடனான எட்வினாவின் உறவு மவுண்ட்பாட்டனுக்கு எப்படிப் பயன்பட்டது என்பது குறித்து

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline