Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சமயம்
நவராத்திரியும் முப்பெரும் தேவியரும்
தேவியின் 108 நாமங்கள்
யோகிசுவரா தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
பக்தியின் மகிமை
- சாந்தா கிருஷ்ணமூர்த்தி|அக்டோபர் 2002|
Share:
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் வழிஅறியாது தவிக்கின்றோம். குழந்தைகள் மீது அன்பு காட்டுகிறோம். அந்த கபடமற்ற முகங்களைக் கண்டு பரவசப்படுகிறோம். குழந்தையைக் கண்டதும் அன்பு மேலீட்டால், அதைக் கொஞ்சுவதை தவிர நமக்கு வேற ஒன்றும் தோன்றுவதில்லை. அதேபோல ஆண்டவனை நினைத்ததுமே அபன் மீது அன்பு பொங்க வேண்டும். அந்தத் தீவிர அன்புதான் 'பக்தி'. அந்த பக்தி உணர்ச்சிவசமாக வராமல், உணர்வு வசமாக வந்ததாக இருக்க வேண்டும்.

அஞ்ஞானத்தின் காரணமாக நமக்கு நம் உண்மை சொரூபம் தெரிவதில்லை. ஆசையின் காரணமாக பலகர்மங்களைச் செய்து, அதன வினை காரணமாக, தொடர்ந்து பிறப்புகள் ஏற்பட, நாம் பிறந்து, பிறந்து நம்முடைய உண்மை சொரூபத்தை அறிந்து கொள்ளாமலேயே இந்தப் பிரம்மத்தோடு நாம் எப்போது கலக்கப் போகிறோம் என்கிற தவிப்பும், அதைப் பற்றிய நினைப்பும் நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படி தவிக்க முடியுமானால், தவிப்பதுதான் உண்மையான 'ப்ரேமை'. இந்தப் ப்ரேமைக்குத்தான் பக்தி என்று பொருள்.

மாயை நாம் 'பிரம்மம்' ஆகாதபடி தடுக்கிறது. உலகவிஷயங்களில் மனதை செலுத்தினால், கஷ்டங்கள் ஏற்பட்டுகொண்டேதான் இருக்கும். அவற்றிலிருந்து மனதை த் திருப்பி, அந்தப்பரம் பொருளைத் தவிர வேறு எதுவும் துணை இல்லை என்று நினைக்க ஆரம்பிரத்தவுடன் மாயை அகன்று 'ஞானம்' ஏற்படும். அந்த பிரம்மஞானம் வந்ததும் மனிதன் மெளனமாகி விடுகிறான். அதுவரை சர்ச்சை பண்ணிக் கொண்டிருப்பான். ''வண்டு, மலர் மீது உட்கரும்வரைதான் ரீங்காரம் செய்யும். உட் கார்ந்ததும் மெளமாகிவிடும். அதுபோல'' என்கிறார் ராமகிரஷ்ண பரமஹம்ஸர்.

பிரம்மத்தை அறிய என்னென்ன தகுதி இருக்க வேண்டும். முதலில் விவேகம். அதாவ 'எது உண்மை, எது பொய் எது நிலையுள்ளது, எது நிலையற்றது என்ற பகுத்தறியும் சக்தி இருக்க வேண்டும். அடுத்து வைராக்யம் . அதாவது எதுநிலையற்றதோ, அதிலி ருந்து ஒதுங்கி இருக்கத் தெரியவேண்டும். பிறகு சமம், தமம் என்று சொல்லப்படும் ஆறு நற்குணங்கள் இருக்க வேணடும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்மத்தை அறியவேண்டுமென்கிற தீவிர வேக்கை இருக்க வேண்டும்.

ஏன் மனிதன் பணம், பதவி, புகழ் இவற்றையே தேடி அலைகிறான் என்ற கேள்விக்கு, ராமதீர்த்தர் பிரம்மம் என்னும் பேரின்பத்திலிருந்து வந்த ஜீவன், மீண்டும் பேரின்பத்தையே தேடுகின்றது. உலகப் பொருட்கள் இன்பம் கொடுப்பதால், அவற்றின் பின் செல்கிறான். ஆனால் அந்த இன்பம் அவனுக்குத் திருப்தி அளிப்பதில்லை. அதனால் இன்னும் இன்பம் வேண்டும் என்று அந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் நாடுகிறான். பேரின்பம் கிடைக்கும்வரை அவன் அப்படித்தான் இருப்பான்.'' என்கிறார். பேரின்பம் அடைய மனிதன் மனம், வாக்கு, காயம் இம்மூன்றி னாலும் பாடுபட வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த ஞானயேகமும், வாக்கைத் தூய்மைப் படுத்த பக்தியோகமும், காயத்தை தூய்மைப்படுத்த கர்மயோகமும் அவசியாமாகிறது. வாசனைகாளல் ஆனவன்தான் மனிதன். கர்மயோகம் வாசனையைக் குறைக்கிறது... பக்தியோகம் வாசனைகளைத் சுத்தப்படுகித்துகிறது. ஞானியோக வாசனைகளை மாற்றி அமைக்கிறது.

கடவுளிடம் பக்தி வைக்க வேதாந்தம், சாஸ்திர ஞானம் இவையொன்றும் தேவையில்லை. அவனிடம் பரிசுத்தமான பக்தி, அன்பு இருந்தால் போதும். ஐந்து வயது பாலகன் துருவன் பகவானிடத்தில் ஆபாரபக்தி கொண்டானே, அவனுக்கு என்ன சாஸ்திரஞானம் இருந்தது? கஜேந்திரனுக்கும் கண்ணப்பருக்கும்தான் என்ன வேதாந்தம் தெரிந்தது. ஆக பகவான் உண்மையான அன்பைத் தானே எதிர்பார்க்கிறார். பகவான் கீதையில் ''எனக்கு உள்ளன்புடனும், பக்தியுடனும், இலை, கனி, மலர், நீர் இவை கொடுத்தாலும் போதும். அதை நான் மகிழ்ச்சியுட்ன் ஏற்று அவர்களுக்கு முக்தி அளிக்கிறேன்'' என்கிறார். இலையைக் கொடுத்து திரெளபதியும், கனியைக் கொடுத்து சபரியும், மலரை கொடுத்து கஜேந்திரனும், நீரைக்கொடுத்து நந்திதேவர் என்ற மன்னனும் முக்தி அடைந்தார்கள். பகவானை எப்படி பக்தி மூலம் அடைய முடியுமோ அதேபோல் அவனை எப்பொழுதும் துவேஷத்தினாலோ, பயத்தினாலோ, நட்பினாலோ அவனை சுலபமாக அடைய முடியும். துவேஷத்தினால், சிசுபாலனும், ஹிரண்ய கசிபுவும், பகவானை நிதிப்பதற்காக அவனையே நினைத்துக் கொண்டிருந் தார்கள். பயத்தின் காரணமாக கிருஷ்ணன் தான் தனக்கு எமனாக வரப்போகிறான் என்று அசரீரி சொன்னதிலிருந்து கம்சனுக்கு பயத்தினால் சதா கிருஷ்ணன் ஞாபகம்தான்.

நட்பினால் பகவானை அடைந்தவர்கள் பாண்டவர்கள். பிராரப்தத்தின் காரணமாக பாண்டவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள் ஆனால் பகவான் அவர்களுக்கு உதவியது நட்பினால்தான். அவர்களுக்கு உதவியது போல் நமக்கும் உதவுவார். நாம் மட்டும் அவள் ஞாபகமாக ஸ்தீரிகள சதாபகவானை நினைத்து மோக்ஷத்தை அடைந்தார்கள்.

பகவானின் நாமங்களை தினமும் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லுவதால் கண்ணுக்கு தெரிந்த பலன். கண்ணுக்குத் தெரியாத பலன் என்று பல பல பலன்கள் கிடைக்கும். அதற்கு உதாரணமாக, கண்ணுக்குத் தெரிந்த பலன் அனு¡மிளன் விஷயத்தில் கிடைக்கிறது. அவன் பகவான் நாராயணனை கூப்பிடவில்லை. தன் மகன் நாராயணனைத்தான் கூப்பிட்டான். இருந்தும் அவனை யமனிடமிருந்து காப்பாற்றினார். கண்ணுக் குத் தெரியாத பலன், திரெளபதி அரச சபையில் துகிலுரியப்பட்டபோது 'கோவிந்தா' என்று அவனை கூப்பிட்டும், அவர் ஓடிவரவில்லை. ஆனால் அவனுடைய ஆடை வளர அவன் மானம் காப்பாற்றப் பட்டது. கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பலன்; கஜேந்திரன் விஷயத்தில் கண்ணுக்குத் தெரிந்த பலன், அது முதலையிடமிருந்து காப்பாற்றப்பட்டது. கண்ணுக்கு தெரியாத பலன் அதற்கு மோக்ஷம் கிடைத்தது. ஆக பகவான் நாமத்தை அர்த்தம் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டும் என்பதுகூட இல்லை என்று பாகவதம் கூறுகிறது. இந்தக் கலியுகத்தில் நம் பாவங்களைப் போக்க பகவான் நாமத்தைவிட எளிய வழி வேறு கிடையாது. அதனால்தான் அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் தருமருக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தின் மகிமையை உபதேசித்தார்.

கடவுளிடம் பக்தி என்றால், அவனிடத்தில் பலனை எதிர்பார்க்காமல் அவன் பேரில் நம்பிக்கை வைக்க வேண்டும். பகவானுடைய சக்தியைப் பற்றி சந்தேகிக்கக்கூடாது. அவன்தான் கதி வேறு கதியில்லை என்று அவனையே நம்பி இருக்க வேண்டும். நம் பலம் பாதி, பகவான் பலம் பாதி என் இருந்தால் பகவான் நம் பக்கமே வர மாட்டார். ஒருவனுக்கு என்ன கொடுக்கவேண்டுமென்று பகவானுக்குத் தெரியும். நாம் செய்த பாவத்திற்கு என்ன தண்டனையோ அதுதான் கிடைக்கும். புண்ணியத்திற்கு என்ன வெகுமதியோ அதுதான் கிடைக்கும். ஆனால் பாவத்தின் தண்டனையைக் குறைத்து பெற, பகவானிடத்தில் பக்தி வைத்தால் அவன் கட்டாயம் நம் கஷ்டங்களைக் குறைப்பான். பகவானிடத்தில் பக்தி செலுத்துவதினால் பல அனுகூலங்களை உள்ளன. நமக்கு எந்தவிதம¨¡ன துன்பங்களாக இருந்தாலும், அவற்றைத் தாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க அருள்புரிவார். பக்தியின் காரணமாக புதுத்தவறுகள் செய்ய மாட்டோம். அதன் விளைவாக அடுத்த ஜென்மங்களும் குறையும். துன்பங்களும் குறையும். இந்த ஜென்மத் திலும் நம்பிக்கை உள்ளவர்களின் பாரத்தை அவரே தாங்கி கொள்வார். பகவானிடம் பக்தி கொள்ளும் அதே சமயம், நம் நடத்தையும் சரியாக இருக்க வேண்டும். நல்ல நடத்தை, பக்தி இவை இரண்டைத்தா
ன் பகவான் நம்மிடம் எதிர்பார்க் கிறார். பக்தியைத் தவிர வெளி ஆடம்பரங்களை கண்டு ஏமாறுவதில்லை என்பதற்கு, அன்று பகவான் துரியோதனன் சபைக்கு தூதராக சென்றாரே அப்பொழுது நடந்த நிகழ்ச்சிகளே சான்றாகும். கிருஷ்ணர் வரப்போகிறார் என்று தெரித்தும் அவரை பல ஆடம்பரகளுடன் வரவேற்க ஏற்பாடு செய்கிறான் திருதராஷ்டிரன். ஆனால் கிருஷ்ணன் இவை ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாமல், தன் பக்தனான விதுரரின் எளிய குடிசையில் போய் தங்குகிறார். திருதராஷ்டிரன் தன் மீதுள்ள அன்பினால் இக் காரியங்களை செய்யவில்லை. தம்மைப் பாண்டவர் களிடமிருந்து தன் பக்கம் இழுப்பதற்காகத்தான் இவ்வாறு செய்கிறான் என்பது அவருக்குத் தெரியும். ஆக பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பது பக்தி ஒன்றைத்தான். கீதையில் பகவான் ''என்ன வேண்டிக்கொண்டால், நீ கஷ்டங்களைக் கண்டு மனம் உடைந்து போகமாட்டாய். அவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உனக்கு கிடைக்கும். அதோடு கஷ்டங்கள் வரவர, உன் பாவங்கள் தீர்ந்து கொண்டிருக்கின்றன என்று அறிந்து மகிழ்ச்சி அடைவாய்'' என்று கூறுகிறார்.

பகவானிடம் பக்தி பண்ணுகிறவர்கள் அவரவர்கள் ருசிக்கேற்ப. மனோபாவத்திற்கு ஏற்ப பக்தியை ஒன்பது விதங்களில் பண்ணலாம். கம்பராமா யணத்தில், கம்பர் இந்த ஒன்பது விதமான பக்திக்கும் ஒவ்வொரு ராமாயாண கதாபாத்திரத்தை எடுத்துக்காட்டாக காட்டுகிறார். முதலில் சிரவணபக்தி. பகவானுடைய நாமங்களையும், கல்யாண குணங்களையும் கேட்டு ஆனந்திப்பது. இப்பக்தியை இன்னும் செய்து கொண்டிருப்பவர் ஹனுமான்.

கீர்த்தனா பக்தியில் பகவானின் பெருமைகளை சதா பேசுவது. இதைச் செய்தவர் வால்மீகி. ஸ்மரண பக்தி சதா பகாவனையே நினைத்துக் கொண்டி ருப்பது. அசோகவனத்தில் இருந்த பத்துமாத காலமும் சீதை சதா ராமனையே நினைத்துக் கொண்டிருந்தாள். பரதசேவன பக்தியாவது பகவான் களில் விழுந்து வணங்குவது. இப்பக்தியால் உயர்ந்தவன் பரதன். பகவானை வணங்கி அவருக்கு மரியாதை அளித்து வந்தன பக்தியைக் கடைப் பிடித்தான் விபீஷணன். பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து அர்ச்சனை பக்தியை செய்து காட்டினவள் சபரி. தாஸ்யபக்தியில் பகவானின் வேலைக்காரனைப் போல் பணிவிடைகள் செய்து உயர்வு பெற்றவன் இலக் குமணன். ஸக்ய பக்தியை பகவானிடம் நட்புக் கொண்டு சுக்ரீவன் நிலைநாட்டி னான். ஆத்ம நிவேதனம் பகவானுக்காக தன் உயிரையே தியாகம் செய்வது. ராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று தன் உயிரையே கொடுத்தவர் ஜடாயு. பக்தர்களன் பக்திக்காகத்தான் பகவானே ஏங்குகிறார். அதனால்தான் அவர் உத்தவரிடம் ''என்னை பக்தியினால் வெகு எளிதில் அடைவது போன்று யோகசாதனைகள், தர்மானுஷ் டங்கள், ஜபபேதம் இவற்றால் அடைய முடியாது. என் மீது பக்திகொண்டவர்களை நான் புனிதமாக்கு கிறேன்'' என்கிறார்.

நம் அவயங்களுக்குள் காதிற்கு மட்டும் மூடி கிடையாது. கண்களை, எதையாவ பார்க்க விருப்ப மில்லை என்றால் கண் இதழ்களைக் கொண்டு மூடிக்கொள்ளலாம். எதையாவது பேசப் பிரியப் படாவிட்டால், நம் வாயை உதடுகளைக் கொண்டு மூடிக்கொள்ளலாம். மூக்குக்குகூட ஏதாவது துர் நாற்றத்தை முகரவிருப்பமில்லையென்றால் மூச்சை அடக்கிக் கொள்ளலாம். காதால் யார் என்ன சொன்னாலும், நல்லதோ கெடுதலோ, காதில் விழத்தான் செய்யும். அதை கேட்கத்தான் வேண்டும். மனிதனுடைய காதில் நல்ல விஷயங்கள் விழுந்து கொண்டே இருக்கட்டும். அதன் காரணமாக அவன் திருந்தட்டும் என்கிற அபார கருணையால்தான் பகவான் அப்படிச் செய்தார். அதனால்தான் நம் பெரியவர்கள் காதினால் கேட்கப்படும் சிரவணத்திற்கு அதிக முக்யத்வம் அளித்தார்கள்.

ஆண்டவன் எப்படி இருப்பான். எங்கிருப்பான் என்று கேட்டால் ஆண்டவன் என்கிற ஒலியிலேயே இருக்கிறான். அதுதான் அவனுடைய உருவம் என்று சொல்கிறார்கள். அனால் தான் கடவுளைக் குறிக்க வந்த 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமே கடவுளாகி விட்டது. கடவுளை நாம் வெளியே எங்கும் தேட வேண்டாம். அவர் நமக்குள்ளேயே மறைந்து இருக் கிறார். அவரை வெளிப்படச் செய்ய ஒரே வழி, நம்முடைய ஆணவத்தைக் குறைத்துக் கொள்ளு வதுதான்.

எல்ல இந்திரியங்களுக்கும் புலனாகாமல், ஓர் இந்திரியத்துக்கு மட்டும் புலனானாலும், அந்த வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். பிரபஞ்சம் முழுவதும் மின்சார அலைகள் வியாபித்திருப்பதாக விஞ் ஞானிகள் சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றை ஐந்து இந்திரியங்களாலும் அறிய முடியவில்லை. அதேபோலத்தான் கடவுள் நம் ஐந்து இந்திரியங் களாலும் அறிய முடியாதவராக அருவமாக இருக் கிறார். இத்தனை இந்திரியங்களையும் படைத்து, அவை கிரஹிக்கிற வஸ்துக்களையும் படைத்து, ஒரு ஒழுங்கு செய்து வைத்திருக்கிறதே அந்தப் பெரிய அறிவைத்தான் 'கடவுள்' என்கிறோம். எந்த பெரியசக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டு இருக்கின்றனவோ, அந்த மகாசக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? அதனால்தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர் அருவடாக இருக்கிறார். ஆனால் அவருக்கு உருவம் உண்டு. கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர்களிடம், தம்மை நிரூபித்துக் கொள்வதற்காக அவர் உருவம் எடுத்துக் கொண்டு வரமாட்டார். ஆனால் அவரை, தங்கள் பக்தியினால் கண்ணால் கண்டு, வாயால் வாழ்த்தி கையால் தொட்டு ஆனந்திக்க விரும்பும் பக்தர்களுக்காக அவர் உருவம் எடுத்துக் கொண்டு வருவார். அவர் அருவமாயினும் உருவம் கொள்வார்.
மின்சாரம், கம்பியில் வரும்போது காற்றடக்கமான ஒரு கண்ணாடி சிமழும் அதனுள் ஒரு சிறு கம்பியும் சேர்ந்து ஸ்விட்சைப் போட்டால் அருவமின்சாரமே ஜோதி ரூபமாகிறது அல்லவா? அதே போல் பக்தர்கள், தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்கிற கம்பியைப் பூட்டிக் கொண்டு சிரத்தை ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாக நம்முன் தரிசனம் தருவார்.

பலதெய்வங்களை வழிபடும் நாம், அவற்றுக்கு பலன்கொடுக்கும் சக்தியை கொடுத்துள்ளதே பகவான்தான் என்பதை அறியாமல் இருக்கிறோம். ''எவனெவன் எந்தெந்த மூர்த்தியைச் சிரத்தை யுடனும், பக்தியுடனனும் பூஜிப்பதற்கு விரும்பு கிறானோ, அவனவனுக்கு அந்த சிந்தனையையே நான் அசையாததாகச் செய்கின்றேன்'' என்று பகவானே கீதையில் கூறுகிறார். பகவான் நம்மீது கருணைக் கொண்டு அரசசாவதார மூர்த்தியாக விக்கரகங்களில் எழுந்தருளியுள்ளார். இதை 'அர்ச்சம்' என்கிறார்கள். இதிலிருந்துதான் அர்ச்சகர் என்ற சொல் வந்தது. எங்கும் வியாபித்திருக்கும் கடவுள் இந்த விக்கிரகங்களிலும் இருந்துதானே ஆக வேண்டும். அதனால்தான் நாம் விக்கிரகங்களை கடவுளாக நினைத்து பக்தியுடன் வணங்குகிறோம். சிலர் ஆண்டவன் கோவிலிலோ, அல்லது தங்கள் பூஜை அறையிலோ மட்டும் உள்ளான் என்று நினைக்கிறார்கள். இவர்கள் கடவுளை வேறு எங்கும் பார்ப்பதில்லை. ஆனால் தாயுமானவர் ''கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான்'' அவன் இல்லாத இடம் கிடையாது என்கிறார். ''எல்லா ஜீவன்களும் என்னுடைய சரீரம் என்று நினைத்து, அவற்றிற்கு தொண்டு செய்தால், அதுதான் நீங்கங்ள செய்யும் பூஜை என்கிறார் பகவான்.

நாம் இறைவனை எப்படித் தொழ வேண்டு மென்றால் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள எப்படி தினம் குளிக்க வேண்டுமோ அதேபோல் உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தினம் ஆண்டவனை தொழ வேண்டும். கை ஒன்று செய்ய, விதி ஒன்று நாட, செவி ஒன்று கேட்க, நாம் பூஜை செய்தால், அதை பகவான் ஏற்றுக் கொள்ள மாட்டார். பகவானுடைய கல்யாண குணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அடுத்து வள்ளுவர் கூறியபடி நமக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு, பிற உயிர்க்கு துன்பம் செய்யாதிருத்தலாகிய தவத்தை மேற்கொள்ள வேண்டும். மலர்கள் கொண்டு பூஜிப்பதோடு, சாஷ்டாங்கமாக அவனை நமஸ்காரம் செய்ய வேண்டும். 'நமஸ்காரம்' செய்வதை தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். இந்த சரீரம் நமதல்ல... இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் 'நமஸ்காரம். உதவாத பொருளை 'அது தண்டமாகிவிட்டது' என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். அதை தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து, ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததேயாகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற அகங்காரத்தை அகற்றி விட்டு, ஈஸ்வரன் முன் இந்த சரீரத்தை கீழே போட வேண்டும். அதுதான் தண்டம் சமர்ப்பித்தல். 'பொறுப்பை உன்னிடமே பூரணமாக தந்துவிட்டேன்' என்பதாகும். நம்முடைய வாய் எப்பொழுதும் பகவானுடைய நாமங்களைச் சொல்லிக் கொண்டும், தர்ம நூல்களை படித்துக் கொண்டும் இருக்க வேண்டும். ஒரு தடவை மனதார பக்தியுடன் பகவான் நாமத்தைச் சொன்னால், அது எத்தனை பாவங்களை போக்குமோ அத்தனை பாவங்களை ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய முடியாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாருக்கு என்ன நாமம் பிடிக்கிறதோ அதைச் சொல்லலாம். இதற்கு நியமம், நிஷ்டை, ஆசாரம் ஒன்றும் கிடையாது.

க்ருத யுகத்தில் மக்கள் ஞான மார்க்கத்தைக் கொண்டும், திரோதாயுகத்தில் யாகம், யக்ஞங்கள் மூலமாகவும் துவாபரயுகத்தில் பூஜை, அர்ச்சனை இவற்றின் மூலமாகவும் ஆண்டவனை அடைந்தார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் அவனை குறித்து ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தால் போதும். அவன் நம்மை நோக்கி ஓடி வருவான் என்கிறது பாகவதம். பக்திக்கு பெயர் போன மகாராஷ்டிரர்கள் இன்றும் நின்றுகொண்டேதான் பஜனை பண்ணுவார்கள். ஏனெனில் இவர்கள் நாமசங்கீர்த்தனத்தைக் கேட்க பகவான் அங்கு வந்து நின்று கொண்டிருக்கும் போது, இவர்கள் உட்காரலாமா? ஆக பகவானே ''நான் வைகுண்டத்திலும் இல்லை. மோகிகளின் இதயத் திலும் இல்லை. எங்கு என் பக்தர்கள் என்னைக் குறித்து பஜனை செய்கிறார்களோ, அங்கு வந்து நிற்பேன்'' என்று நாரதரிடம் கூறுகிறார்.

நம்முடைய பூர்வகர்மாவினால் 'பந்தம்' என்கிற கட்டினால் நம்மை கட்டி இருக்கிறார் பகவான். அப்படிக் கட்டிபோடாவிட்டால், நம்மையும் கெடுத்துக் கொண்டு, உலகத்தையும் கெடுத்து விடுவோம். இப்பொழுதே கெடுக்கிறோம். இப்படி கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது, பகவானிடம் சித்தத்தை வைக்கிறோம். இல்லாவிடில் அவனை அடியோடு மறந்து, இப்படியே சம்சாரத்தில் உழன்று கொண்டுதான் இருப்போம். நம்முடைய நன்மைக்காகத்தான், நம்மை கட்டிபோட்டிருக் கிறார். அவரிடம் ''எப்பொழுது அவிழ்த்து விடுவீர்கள்'' என்று கேட்டால் ''ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்குப் பாவம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால் அவிழ்த்து விடுவேன்' என்கிறார்.

''உலக¨த் துறக்காமலேயே, மனிதன் உலகில் இருந்து கொண்டே கடவுளை அடையலாம். அரச மரத்தை அது ஒரு சிறு செடியாக இருக்கும் போது இரும்பு வேலி கொண்டு காப்பாற்ற வேண்டும். ஆனால் அது பெரிய மரமானது இரும்புவேலி தேவையில்லை. ஆகவே தனித்திருந்து ஆன்மீக பயிற்சிகள் செய்த பிறகு குடும்பத்தில் வாழ் . அது உன்னை ஒன்றும் பண்ணாது. நம் மனம் பாலைப் போன்றது. அதை உலகம் என்னும் தண்ணீரில் வைத்தால் இரண்டும் கலந்து விடும். ஆனால் பாலை பகவான் நாமம் என்கிற தயிரினால் உறைகுத்தி அதை ஆடாமல் வைத்தால் தயிராகும். அதை பகவத் தியானம் என்கிற மத்தால் கடைந்தால் வெண்ணை யாக, பகவான் நம் கண்முன்தோன்றுவார். இப்பொழுது அது தண்ணீரோடு கலக்காது தனித்து நிற்கும். ஆக உலகில் வாழ். ஆனால் ஒரு கையால் உன் கட¨மைகளைச் செய். செய்து முடித்து ஓய்வு எடுக்கும் போது, பகவானின் பாதங்களை உன் இருகைகளாலும் இறுக் பற்றிக் கொள்'' என்கிறது வேதம். மனதைக் கொண்டு அவன் மது பக்தியை செலுத்தி, புத்தியைக் கொண்டு அவனைப் பற்றிய ஞானத்தை அடைய வேண்டும்.

பக்தியிலும் சிறந்தது பிரபத்தி. அதாவது சராணகதி என்பது. நாம் பகவானின் உடைமைகள் அவன்தான் உடையவன். உடையவன்தான் உடைமைகளைக் காப்பாற்ற வேண்டுமேயொழிய உடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாது. காப்பாற்றிக் கொள்ளக் கூடாது. ஆக என் செயலால் ஒன்றுமில்லை. எல்லாம் உன் செயலே என்று உணரப் பெற்றேன் என்று பேசாமால் இருப்பதுதான் சரணாகதி.

ஒரு பக்தர் பகவானிடம் இவ்வாறு சொல்கிறார். ''ஹே பிரபோ! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை பொறுத்தருள வேண்டும். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப் போகிற ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காமல் இருக்கப் போவது இரண்டாவது அபராதம். போன ஜென்மத்தில் நான் உன்ன நமஸ்கரிக்கவில்லை என்று எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? போன் ஜென்மத்தில் உன்னை நான் நமஸ்கரித்திருந்தால் இந்த ஜென்மம் வந்திருக்குமா? அடுத்த ஜென்மம் நான் உன்னை நமஸ்கரிக்க மாட்டேன். ஏன் தெரியுமா? அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருந்தால்தானே உன்னை நமஸ்கரிப்பதற்கு? இந்த ஜென்மத்தில் உன்னை நமஸ்கரித்துவிட்டால், இனி நீ எனக்கு பிறவியே கொடுக்க மாட்டாயே! என்று வேண்டுகிறார். ஆக இந்த சுலோகத்திலிருந்து மன பூர்வமாக பகவானை நமஸ்காரம் செய்துவிட்டால், அவர் நம்மை இந்தப் பிறவிக் கடலிலிருந்து விடுவித்துவிடுவார் என்று தெரிகிறது.

நாமும் ஆண்டவனும் ஒன் என்கிற நிலைதான் உண்மையானநிலை. ஆனால் மிகக் கடைசி நிலை. மனம் பகவான் மீது ஊடுருவிச் சென்றால், நாம் பகவானிடம் இரண்டறக் கலந்துவிடுவோம்.

சாந்தா கிருஷ்ணமூர்த்தி
More

நவராத்திரியும் முப்பெரும் தேவியரும்
தேவியின் 108 நாமங்கள்
யோகிசுவரா தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline