Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 15)
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2015|
Share:
ஜேகப் உதவியால் வேகமாக நிதி திரட்ட இயன்றதால் பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவைச் சேர்க்கமுடிந்தது; அதில் ஒருவரான ப்ளாஸ்டிக்ஸ் நிபுணர் நீல் ராபர்ட்ஸன்தான் மெல்லிழை நுட்பத்தின் மூலம் உடல் அங்கங்கள் போலவே கேபிலரி நாளங்களை பதித்து நாளமிடல் தடங்கலை அடியோடு தகர்த்ததாக விளக்கியதும் வியந்த சூர்யா, எவ்வாறு முழு அங்கப் பதிப்புத் தடங்கலைத் தாண்ட முடிந்தது என்று கேட்டார். அகஸ்டா அதை விவரிக்கலானாள்.

"அது மிகக் கடினமான தடங்கல்தான். எங்கள் நிபுணர்குழு அதையும் தகர்த்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்துள்ள நூதன கட்டமைப்பு (structure) நுட்பத்தின் மூலமாக எங்களால் முழு அங்கங்களைப் பதிக்கமுடிந்துள்ளது. கண், இதயம், சிறுநீரகம் போன்ற அங்கங்களைப் பதித்துள்ளோம். ஆனால் மூளை ஒன்றை இன்னும் பதிக்க இயலவில்லை. பரவாயில்லை, மூளையைப் பதித்தாலும் மாற்றங்கமாகப் பொருத்தி இயங்க வைக்கமுடியுமா என்று தெரியாது. மிக நுண்மையான அமைப்பு உள்ளதால் நுரையீரலும் சற்று சிக்கலாக உள்ளது. மற்றபடி குட்டன்பயோர்க் மற்ற ஆராய்ச்சி நிலையங்களைவிட வானளவு உயர்ந்துள்ளது என்று நானே தம்பட்டமடித்துக் கொள்ளத்தான் வேண்டும்."

ஷாலினி பாராட்டினாள், "வாவ்! கேட்க பிரமாதமா இருக்கே? அது என்ன அமைப்பு நுட்பம்? இயற்கைக்கு நிகராகச் செய்யமுடியுமா என்பதைக் கற்பனையே செய்ய முடியவில்லை!"

"இயற்கையன்னைக்கு நிகராகிவிட்டோம் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனாலும் முழு அங்கங்களாக்கியதே சாதனைதான்" என்று கூறிய அகஸ்டாவை, ஷாலினியின் திடீர் சிரிப்பு இடைமறித்தது. "ஸாரி, ஸாரி அகஸ்டா. நீங்கள் மூளைப்பதிப்பு பற்றி சொன்னதும் என் கற்பனை சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது. மூளைமாற்றம் செய்ய முடிந்தால், முதலில் நல்லதொரு மூளையாகப் பதித்து கிரணுக்கு மாற்றவேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் சிரிப்பை அடக்க முடியவில்லை!" என்றாள்.

கிரண் துள்ளிக்குதித்தான். "அஹாஹா, என்ன கற்பனை! நானும் மூளைமாற்றத்துக்கு ஒரு பட்டியல் போட்டேன், அதில் முதல்பெயர் உன்னுடையதுதான் ஷாலினி. அதற்குப் பிறகு பல அரசியல்வாதிகள் உள்ளனர்" என்றுக் கைக்கணினியை எடுத்து அகஸ்டாவுக்குக் காட்டிக் கண்சிமிட்டினான்.

அதைப்பார்த்த அகஸ்டா சிரிக்கவே ஷாலினி கிரணின் கையை இழுத்து கைக்கணியைப் பார்த்தாள். அதன் திரையில் ஒரு பெயரும் இல்லை. அதைக் கண்டு ஷாலினியின் முகம் போன கோணலைப் பார்த்து கிரண் சிரித்தான்! "ஷாலூ நல்லா மாட்டிக்கினியா? என்னையா சீண்டறே!" என்றான்.

அகஸ்டா சிரிக்க, சூர்யாவும் முறுவலித்தார். "சரி சரி, ரெண்டு பேரும் ரொம்ப க்ளெவராத்தான் இருக்கீங்க! அகஸ்டா, உங்க கட்டமைப்பு நுட்பம் எப்படி முழு அங்கம் பதிக்க உதவுது, யார் கண்டு பிடிச்சாங்க, சொல்லுங்க."

அகஸ்டா தொடர்ந்தாள். "அந்தக் கட்டமைப்பு நுட்பத்தை ஒரு குழுவாகச் சாதித்தோம் என்று சொல்லவேண்டும். முழு அங்கப் பதிப்புக்குத் தேவையான உயிரணுக்களின் நுட்பத்தை அலெக்ஸூம் நானும் சேர்த்து ஆராய்ந்து முன்னேற்றினோம். ஆனால் அதில் முக்கியமானது அங்க உருவின் கட்டமைப்பு (structure). அதைச் செய்தது சேகர் சுப்ரமண்யன் என்பவர்... ப்ளாஸ்டிக் உதவி மீண்டும் நீல் தான்."

அகஸ்டா தொடர்வதற்குள் ஷாலினி பெருமையுடன் குறுக்கிட்டாள். "ஓ தமிழரா? வாவ்! எங்க ஊர் ஆசாமி! இதுவரைக்கும் எங்க கேஸ்களில் எங்க ஊர் ஆளைச் சந்திக்கலைன்னு நினைக்கிறேன். இல்லயா சூர்யா?!"

சூர்யா யோசித்து தலையசைத்தார். "இல்லன்னுதான் நினைக்கறேன். அப்படி யாரும் சட்டுன்னு கவனத்துக்கு வரலை. சரி, சேகர் எந்த மாதிரி நுட்பத்தை உருவாக்கினார்."

"அது எனக்கு சரியா சொல்லத் தெரியலை. அவரையே விவரமாக் கேட்டுக்குங்க. நான் சொல்றது என்னன்னா, நீல் ராபர்ட்ஸன் எப்படிக் கேபிலரி அளவு நுண்ணிய ரத்தநாளத்துக்கு ப்ளாஸ்டிக் இழை அமைச்சுக் குடுத்தாரோ அதே மாதிரி, அங்கங்களுக்கு அடிப்படையா இருக்கவும், மற்றும் வேண்டிய துளைகள், சிறு அறைகள் எல்லாம் இருக்கறா மாதிரி ஒரு சரியான வடிவமைப்பு அமைச்சுக் கொடுத்தார் சேகர். இது சிறிய அளவில் இருக்கக்கூடிய அமைப்புக்கான உயிர்ப்பொறியியல் (bioengineering) சாதனைன்னு தான் சொல்லணும். ப்ரில்லியண்ட் மேன் தட் சேகர்!" என்றாள் அகஸ்டா.
ஷாலினி, "ஒ! பிரமாதம். இது சமீபத்துல யுனிவர்ஸிடி ஆஃப் வாஷிங்டன் விஞ்ஞானிகள் ஒருத்தரோட இடுப்பெலும்பு குற்றெலும்புநார் (rib cartilage) கொஞ்சம் எடுத்து அதை முப்பரிமாண வார்ப்பச்சு (mould) மேல வச்சு காது மடல் மாதிரி செஞ்சு பொருத்தியிருக்காங்கன்னு ஒரு கட்டுரை படிச்சேன். அதுவே பிரமாதம்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இது அதைவிட மிக முன்னேறிய நுட்பம்! நிச்சயமா ப்ரில்லியண்ட்தான்!" என்றாள்.

அகஸ்டா பவ்யமாகக் தலைவணங்கி முறுவலுடன் ஷாலினியின் பாராட்டை ஏற்றுக்கொண்டு, விளக்கினாள். "மிக்க நன்றி ஷாலினி. ஆனா நான் என்ன சொல்வேன்னா, இது ஒரு விதத்துல வித்தியாசமானதுன்னுகூட எடுத்துக்கலாம். வார்ப்பச்சு மேல எலும்புநார் வச்சு செய்யறாமாதிரி இருந்தாலும், எங்க நுட்பத்துல மூணு வித்தியாசங்கள் உள்ளன. முதலாவது நாங்க ஏற்கனவே உள்ள திசுவை உடலிலிருந்து வெட்டி எடுத்து வார்ப்பச்சு மேல ஒட்டறதில்லை. உயிரணுக்களை வார்ப்பச்சு மேல் முப்பரிமாணமாகப் பதித்து, வளர்க்கிறோம். இன்னொரு வித்தியாசம் என்னென்னா..."

கிரண் உற்சாகமாக இடைமறித்தான். "ஓ! ஓ! பிக் மீ, பிக் மீ! ரெண்டாவது வித்தியாசம் எனக்குத் தெரியும்!"

ஷாலினி "ஆஹா, கிரண், சொல்லேன் பாக்கலாம்!" என்று சீண்டினாள். அகஸ்டாவும் முறுவலுடன் கை உயர்த்தி வரவேற்றாள். கிரண் தொடர்ந்தான். "கேபிலரி குழாய்களை மிக மெல்லிய அளவுக்கு வடிச்சமாதிரி, நிஜ முழு அங்கங்களுக்குத் தேவையானபடி உங்க ப்ளாஸ்டிக் வார்ப்பச்சுகள் மிகமிகச் சிறிய அறைகளும், மெல்லிய குழாய்களும் பொருந்தி, ரொம்பச் சிக்கலாகவும் நுண்ணியதாகவும் அமைஞ்சிருக்கறதுனால மற்ற ஆராய்ச்சிக்கூடங்களை விட முன்னேறிய நுட்பங்கறீங்க, அதானே?!"

அகஸ்டா, "வாவ் கிரண், ஹோம் ரன் அண்ட் புல்ஸ் ஐ! சரியான அடி அடிச்சுட்டே! அதேதான் ரெண்டாவது வித்தியாசம்" என்று ஆமோதித்தாள்.

சூர்யா முறுவலுடன், "இப்படிப்பட்ட பயனுள்ள சாதனைகளைத் தம்பட்டம் அடிக்கறதுல தப்பில்லை! அப்பதானே உலகத்துக்கும் தெரியும்" என்றார்.

"ஓ! சூர்யா சொன்னதும்தான் எனக்கும் தோணுது! குட்டன்பயோர்க் நுட்பங்களைப்பத்தி நான் எந்த அறிவியல் பத்திரிகைகளிலும் (journals) கருத்தரங்கங்களிலயும் (conferences) கேள்விப்பட்டதேயில்லயே ஏன்?" என்று ஷாலினி கேட்டாள்.

அகஸ்டா, "அப்படின்னா, நுட்பங்களை ரகசியமா வைக்க நாங்க செஞ்ச முயற்சி வெற்றின்னுதான் சொல்லணும். நாங்க எங்க நுட்பங்களைப்பத்தி எதுவும் வெளியிடலை. நான் முன்னால வேற நிறுவனத்தில் இருந்தப்போ சில ஆரம்பநிலை நுட்பங்களைப் பத்தி வெளியிட்டிருந்தேன். அதை வேணா அறிவியல் பத்திரிகைகளில் பார்க்கலாம். ஆனா குட்டன்பயோர்க் நுட்பங்கள்... உஷ்!" என்று உதடுகளை விரலால் மறித்து மௌனசைகை காட்டினாள்.

சூர்யா குறுக்கிட்டார். "சரி, உங்க முழு அங்கப் பதிப்பின் நுட்பத்தின் மூணாவது வித்தியாசம்?"

அகஸ்டா தொடர்ந்தாள். "சொல்றேன். மூணாவதுதான் மிக முக்கியமானது. முழு அங்கப் பதிப்புக்கு ஒரு பெரும் தடங்கல் என்னன்னா, ஒவ்வொரு பரப்பா மேலமேல பதிச்சு வளர்க்கறப்போ, நாளங்கள் ஒவ்வொரு பரப்பையும் ஊடுருவி அங்கம் முழுவதும் பரவியதாக எப்படிப் பதிக்கறதுன்னு மண்டையை உடைச்சுகிட்டோம். அதைத்தான் சேகருடைய வார்ப்பமைப்பு சாதிச்சது. ரொம்ப சாதுர்யமா அவர் ப்ளாஸ்டிக் குழாய்களையும் திசுக்களோட ஒவ்வொரு பரப்பு உயிரணுக்கள் பதிக்கறச்சயும், கொஞ்சம் கொஞ்சமா பதிச்சு ரெண்டையும் சேர்த்து வளர்க்கறா மாதிரி செஞ்சார். ப்ராப்ளம் ஸால்வ்ட்! ஏற்கனவே சொன்னேனே, ப்ரில்லியண்ட் சேப்!"

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline