Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ஆலு போஷ்தோ
மிஸ்ஸி ரொட்டி
- கிருஷ்ணவேணி|ஜூன் 2014|
Share:
Click Here Enlargeதேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1/4 மேசைகரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். தனியாவை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடிக்கவும். பச்சை மிளகாய், உப்பு, கொத்துமல்லியை விழுதாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், வெண்ணெய், அரைத்த கொத்துமல்லி விழுது, பொடித்த தனியா, ஊற வைத்த பாசிப்பருப்பு (தண்ணீரில்லாமல்) சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாக இட்டு தவாவில் போடவும். இருபுறமும் எண்ணெய் தடவி வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

இது ராஜஸ்தான் மாநில டிஷ். சற்று கனமான ரொட்டிகளாக இருக்கும். சூடாக மட்டுமே சாப்பிட முடியும்.
கிருஷ்ணவேணி,
வர்ஜீனியா
More

ஆலு போஷ்தோ
Share: