Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
உப்பு ரவா ரொட்டி
இதெல்லாம் நல்லதுங்க....
ரவா ரொட்டிகள்
- தங்கம் ராமசாமி|பிப்ரவரி 2011|
Share:
Click Here Enlargeஇனிப்பு ரவா ரொட்டி

தேவையான பொருட்கள்
ரவை - 1 கிண்ணம்
வெல்லம் - 3/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சீஸ் துருவல் - 1/4 கிண்ணம்
ஏலக்காய் - 6
எண்ணெய், நெய் (கலந்தது) - 1/2 கிண்ணம்

செய்முறை
ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு, வெல்லமும் தேங்காயும் போட்டு அடுப்பில் கரைய விடவும். வெல்லம் கரைந்து கொதி வரும்போது ரவையைப் போட்டுக் கிளறவும். வெண்ணெயை அதில் போட்டு, ஏலக்காய் தூவி இறக்கி வைத்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஓர் இலை அல்லது அலுமினியம் பேப்பரில் எண்ணெய் தடவி அதில் பெரிய எலுமிச்சம்பழ அளவு மாவை வைத்துச் சப்பாத்தி போல மெல்லியதாய்த் தட்டி தோசைக் கல்லில் போட்டு அடுப்பை மெதுவாக எரியவிட்டு இருபுறமும் நெய்/எண்ணெய் விட்டு, சிவந்ததும் எடுக்கவும். மேலாகச் சீஸ் துருவலைப் பரப்ப ரோல் போலச் சுருட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். இது மிகவும் சுவையான ரொட்டி. கெச்சப் தொட்டுக்கொண்டு சுடச்சுடச் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்சி
More

உப்பு ரவா ரொட்டி
இதெல்லாம் நல்லதுங்க....
Share: