| தமிழ்நாடு அறக்கட்டளையின் மிச்சிகன் கிளையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் டிசம்பர் 14 அன்று ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதிய 'பஞ்சதந்திரம்' நகைச்சுவை நாடகத்தை, மிச்சிகன் முனைவர் வெங்கடேசன் குழுவினர் வழங்கினர். இதன்மூலம் 50,000 டாலர் நிதி திரட்டப்பட்டது. வழங்கிய 400 கொடையாளர்களை வரவேற்ற கிளைத்தலைவரும் தமிழ்ச்சங்க மேனாள் தலைவருமான முனைவர் மா. சுப்பிரமணியன், இந்த நிதி நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியில் ஆதிதிராவிடர் அதிகமுள்ள 4 அரசுப் பள்ளிகளிலும் நாமக்கல் பகுதியில் இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் TNF-ABC திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் என அறிவித்தார். 
 சிவகங்கை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக இயங்கிவரும், TNF-ABC திட்டத்தை அறக்கட்டளைத் துணைத்தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம் அறிமுகப்படுத்தினார். சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், துணைத்தலைவர் ராஜ் பழனிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாடகத்தின் இறுதியில் அறக்கட்டளையின் தலைவர் அறவாழி, வெங்கடேசன் மற்றும் சந்திரமௌலிக்குப் பொன்னாடை அணிவித்தார். துணைச்செயலர் திருமதி. லதா மணி நன்றியுரையாற்றினார்.
 
 TNF-ABC திட்டம் பற்றிய விவரங்களுக்கு:
 முனை. மா. சுப்பிரமணியன் - 248.737.5708
 இணையதளம்: tnfusa.org
 
 நல்லி ரவி,
 மிச்சிகன்
 |