| சிலர் எங்கே போனாலும் மகிழ்ச்சி உண்டாகும்; சிலர் எங்கிருந்து போனாலும் மகிழ்ச்சி உண்டாகும். 
 ஆஸ்கார் வைல்டு
 
 *****
 
 என்னுடைய இரண்டு மனைவிகள் விஷயத்திலும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலாமவள் என்னை விட்டுப் போய்விட்டாள்; இரண்டாமவள் போகவில்லை.
 
 பேட்ரிக் மரே
 
 *****
 
 முதல் இரண்டு வருடங்கள் குழந்தைகளுக்கு நடக்கவும் பேசவும் கற்றுக் கொடுக்கிறோம். அடுத்த 16 வருடங்கள் அவர்களைப் பேசாமல் உட்கார் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
 
 யாரோ
 
 *****
 
 உன் திருமண வாழ்வில் அன்பு பொங்கித் ததும்ப வேண்டுமென்றால், நீ தவறாக இருந்தால் ஒப்புக்கொள்; எப்போது நீ சரியோ வாயை மூடிக்கொண்டிரு.
 
 ஆக்டன் நாஷ்
 
 
 
 |