| தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி –  1  கிண்ணம்
 எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 2
 லவங்கம் – 1
 பட்டை -  1 அங்குலத் துண்டு
 சோம்பு - 2 தேக்கரண்டி
 வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/2 கிண்ணம்
 தக்காளி விழுது - 2 மேசைக்கரண்டி
 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 புதினா (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 உப்பு – தேவைக்கேற்ப
 எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
 உருளைக்கிழங்கு (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
 தயிர் - 2 மேசைக்கரண்டி
 அரிசி மாவு - 1 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 கொத்துமல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
 
 செய்முறை
 உருளைக்கிழங்கு, தயிர், அரிசி மாவு, மஞ்சள் தூள், கொத்துமல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் ஊற வைத்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அரிசியைக் கழுவி 2 கிண்ணம் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காய வைத்து பச்சை மிளகாய், லவங்கம், பட்டை, சோம்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகுவெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக மாறியவுடன் தக்காளி பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்), உப்பு கலந்து மூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கமகம உருளைக் கிழங்கு பிரியாணி, கொண்டா கொண்டா என்று கேட்பார்கள்!
 
 நித்யா நவீன்
 |