| தேவையான பொருட்கள் சாதம் –  1  கிண்ணம்
 எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 கடுகு - 1/4 தேக்கரண்டி
 உளுத்தம்பருப்பு  - 1 தேக்கரண்டி
 கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
 கறிவேப்பிலை - 4
 சிவப்புமிளகாய் - 2
 பச்சைமிளகாய் - 2
 வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
 இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 அரைக்க
 மாங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
 வறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
 
 செய்முறை
 அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். உப்பு, கொத்துமல்லி சேர்க்கவும். அதைச் சாதத்தில் நன்கு கலந்து பரிமாறவும்.
 
 நித்யா நவீன்
 |