| தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு - 1/2 கிண்ணம்
 மைதா மாவு - 1/4 கிண்ணம்
 பழுப்புச் சர்க்கரை - 1/4 கிண்ணம்
 வெண்ணெய் - 1/4 கிண்ணம்
 பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
 வனில்லா எஸ்சென்ஸ் – 1/2 தேக்கரண்டி
 
 செய்முறை
 அவனை (oven) 350°Fக்குச் சூடு செய்யவும். வெண்ணையுடன் பழுப்புச் சர்க்கரை, வனில்லா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இதனுடன் கேழ்வரகுமாவு, மைதா மாவு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவைச் சப்பாத்திபோல இட்டு, குக்கீ கட்டர் வைத்து விரும்பிய வடிவில் வெட்டவும். பேக்கிங் ஷீட்டில் வெண்ணெயைத் தடவி, வெட்டிய துண்டுகளைச் சிறு இடைவெளி விட்டு வைக்கவும். அவனில் 12-15 நிமிடம் வரை பேக் செய்யவும். பின் பேக்கிங் ஷீட்டை வெளியே எடுத்து 15 நிமிடம் குளிர வைக்கவும்.
 
 நித்யா நவீன்,
 சான் ஹோசே, கலிஃபோர்னியா
 |