| ஊரெல்லாம் ஒரே பேச்சு ஒல்லியாவது எப்படி?
 
 என்னிடமும் கேட்டார்கள்.
 
 இயல்பிலேயே இனிப்பு பிடிக்காது என்றேன்
 நம்பவில்லை
 அரைமணி நேர வேகநடை என்றேன்
 நம்பவில்லை
 ஐம்பது தோப்புக்கரணங்கள் என்றேன்
 நம்பவில்லை
 முந்நூறு முறை
 கயிறு தாண்டிக் குதிக்கிறேன் என்றேன்
 நம்பவில்லை
 தோட்டவேலை
 வீட்டு வேலைக்கு ஆளில்லை என்றேன்
 நம்பவில்லை
 
 என் அம்மாவும் ஒல்லிதான் என்றேன்
 ஓ அதிர்ஷ்டக்காரியே!
 அதுதானா கதை! என்றார்கள்
 என் அப்பா குண்டு என்பதை மட்டும்
 நான் சொல்லவே இல்லை!
 
 ஜெயா மாறன்,
 அட்லாண்டா, ஜார்ஜியா
 |