| இது நம்ம செல்லக் குட்டிகளுக்கு வெல்லம் போட்ட சப்பாத்தி. அவங்க பாக்காதப்ப நாமளும் கொஞ்சம் மொசுக்கலாம், தப்பில்ல! 
 தேவையான பொருட்கள்
 கோதுமை மாவு – 1 1/4 கிண்ணம்
 வெல்லத் துருவல்  - ¾  கிண்ணம்
 ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
 உப்பு – 1/4  தேக்கரண்டி
 நெய் – தேவைக்கேற்ப
 
 செய்முறை
 வெல்லத் துருவலை கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரையவிட்டு வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய்த் தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். சிறிய சப்பாத்திகளாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு, நெய் சேர்த்துச் சுட்டெடுங்கள். வாவ், சோ ச்வீட்!
 
 நித்யா நவீன்,
 சான் ஹோசே, கலிஃபோர்னியா
 |