| அரசியல்வாதி (மேடையில் பேசுகிறார்): ஆளும்கட்சி மாதிரி இல்லாம, நாங்க ஆட்சிக்கு வந்தா, மாதத்துக்கு ஒரு மணி நேரமாவது அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர் தர முயற்சி செய்வோம்னு தெரிவிச்சுக்கறேன். 
 *****
 
 நீதிபதி: கோர்ட்ல பொய் சொல்லி அவமதிச்சதுக்கு உனக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை.... ஏன் சிரிக்கற?
 திருடன்: ஒண்ணுமில்லீங்க ஐயா, கோர்ட்டுல வாதாடுற வக்கீல்கள் பத்தி நெனச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்திடுச்சு!
 
 *****
 
 ஒருவர்: ஸ்கூல்ல அந்த பையனப் போட்டு எல்லாரும் கண்டபடி அடிச்சுட்டு, அப்பறம் சிரிச்சுட்டுப் போறாங்க! பாவம், யாரு அந்தப் பையன்?
 மற்றோருவர்: அவனா! அவன் பிரபல தமிழ்ச் சிரிப்பு நடிகரோட பையன்.... ரொம்ம்ம்ப நல்லவன்.
 
 தமிழ்மேகம்,
 மிச்சிகன்
 |