| தேவையான பொருட்கள் பச்சரிசி - 2 கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
 முந்திரிப் பருப்பு (பொடியாக்கியது) - 1/4 கிண்ணம்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - 1 சிறு கிண்ணம்
 
 செய்முறை
 
 பச்சரிசியை ஊற வைத்து, தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு
 மிக்சியைக் கழுவி, அந்தத் தண்ணீரை அடுப்பில் சுட வைத்து மாவில் ஊற்றவும். முந்திரிப் பொடியும், உப்பும், கறிவேப்பிலையும் போடவும். எண்ணெயைச் சிறிது சுடவைத்து மாவில் ஊற்றி மெல்லிய தோசையாக ஊற்றி மேலாக ஒரு மூடி போட்டு மூடி வைத்து, வெந்த பிறகு எடுக்கவும். இது ஒரு பக்கம் வேகவிட்டால் போதும். தோசை மிகவும் சுவையாக இருக்கும். இது காலையில் ஊறவைத்து மாலையில் வார்க்கலாம். புளிக்க வேண்டிய அவசியம் இல்லை. புளி மிளகாய்ப் பச்சடி இதற்கு நன்றாக இருக்கும். தேங்காய்ச் சட்னியும் சேர்த்துச் சாப்பிடலாம். மாவிலேயே எண்ணெய் ஊற்றி விடுவதால் தோசையைச் சுற்றி ஊற்ற வேண்டியது இல்லை.
 
 தங்கம் ராமசாமி,
 பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
 |