| தேவையான பொருட்கள் 
 சர்க்கரைவள்ளிக்கிழங்கு	-	1/2 கிலோ
 பாதாம்பருப்பு	-	8
 பால்	-	3 கிண்ணம்
 சர்க்கரை	-	2 1/2 கிண்ணம்
 ஏலக்காய்	-	6
 முந்திரிப் பருப்பு
 பிஸ்தா
 நெய்
 
 செய்முறை
 
 கிழங்கைத் தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும். நெய் விட்டுச் சுருள வதக்கிக் கொண்டு பாதாம் பருப்பை ஊறவைத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். வதக்கிய கிழங்கை மத்தால் மசித்து (மிக்சியில் அரைக்கக் கூடாது) கொதித்த பாலில் சர்க்கரையும் போட்டு ஒரு கொதி விடவும்.
 
 இறக்கி முந்திரி பிஸ்தா வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடியும் போடவும்.
 
 இந்தப் பாயசம் மிகச் சுவையாய் இருக்கும்.
 
 தங்கம் ராமசாமி
 |