| தேவையான பொருட்கள் எடமாமெ - 1 கிண்ணம்
 தேங்காய்த் துருவல் - 1/2 கைப்பிடி
 உப்பு - தேவைக்கெற்ப
 பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
 கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
 எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 பெருங்காயம் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 
 செய்முறை:
 எடமாமெவைக் குக்கரிலோ அல்லது நுண்ணலை அடுப்பிலோ வேகவைக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துப் பின் பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு போட்டு சற்று வதக்கவும். கடைசியாக வெந்த எடமாமெ சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
 தேங்காய் போடாமல் தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டுச் சிறிது மசாலாப் பொடி தூவியும் செய்யலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்,
 பாஸ்டன்
 |