| "கூரையில விரிசல். ராத்திரி பெஞ்ச மழையில கட்டிலெல்லாம் நனைஞ்சு போச்சு" 
 "உன் 'காட்'டில மழைன்னு சொல்லு!"
 நூரணி சிவராம்,
 டிராய், மிச்சிகன்
 
 *****
 
 பொடியன்: "அப்பா, இன்னைக்கு நான் செய்யாத தப்புக்கு என்னை டீச்சர் திட்டினாங்கப்பா"
 
 அப்பா: "அடப் பாவமே! என்ன அது?"
 
 பொடியன்: "நான் ஹோம்வொர்க் செய்யலை...."
 ஸ்ரீ
 
 *****
 
 தாத்தா: டேய் சுப்பு, ஒரு நிமிஷம் வா இங்கே.
 
 சுப்பு: அவசரமா அப்பாயிண்ட்மெண்டுக்கு போய்ட்டிருக்கேன், அப்புறம் வரேன்.
 
 தாத்தா: பொடிப்பயலே, உனக்கு என்னடா அப்பாயிண்ட்மெண்ட்?
 
 சுப்பு: அப்பாவுக்கு ஆயிண்ட்மெண்ட் வாங்கப் போறேன்னு சொன்னேன் தாத்தா, கால்ல சுளுக்காம்.
 நூரணி சிவராம்,
 டிராய், மிச்சிகன்
 
 *****
 
 "இது என்ன, வீடு பூரா ஒய்ன் பாட்டிலா இருக்கு!"
 
 "இது 'குடி' இருந்த வீடுங்க..."
 
 நூரணி சிவராம்,
 டிராய், மிச்சிகன்.
 |