| தேவையான பொருட்கள் பெரிய ஸுக்கினி	-	6 துண்டுகள்
 பச்சைமிளகாய்	-	6
 இஞ்சித் துருவல்	-	1 தேக்கரண்டி
 மஞ்சள் தூள்	-	1/4 தேக்கரண்டி
 எலுமிச்சைச் சாறு	-	1 மேசைக்கரண்டி
 கடுகு	-	1 மேசைக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	1 மேசைக்கரண்டி
 பெருங்காயத் தூள்	-	1 சிட்டிகை
 உப்பு	-	தேவைக்கேற்ப
 கொத்துமல்லி	-	சிறிதளவு
 
 செய்முறை
 ஸுக்கினியைக் கழுவித் தோல்நீக்கித் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை பிரஷர் குக்கரில் வேகவிட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயப்பொடி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு வதக்கவும். கடுகு வெடித்து உளுத்தம்பருப்பு சிவந்ததும் மசித்த ஸுக்கினியை அதில் போடவும். உப்புப் போட்டு மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கிளறியவுடன் நீர்த்தாற்போல் இருந்தால் 1 தேக்கரண்டி அரிசிமாவைத் தண்ணீரில் கரைத்து விடவும். கொதித்தவுடன் நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி தூவி இறக்கவும். எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறிப் பரிமாறலாம். சாம்பார் சாதம், காரக் குழம்புக்குத் தொட்டுக்கொள்ள மிக ருசியாக இருக்கும்.
 
 பிரேமா நாராயணன், ஷோம்பர்க், இல்லினாய்ஸ்
 |