| தேவையான பொருட்கள் இஞ்சி	-	பெரிய துண்டு
 ரசப்பொடி	-	2 தேக்கரண்டி
 பச்சை மிளகாய்	-	1
 தேங்காய்த் துருவல்	-	1 தேக்கரண்டி
 கொத்தமல்லி	-	சிறிதளவு
 தக்காளி	-	2
 உப்பு	-	தேவைக்கேற்ப
 பெருங்காயம்	-	சிறிதளவு
 நெய்	-	சிறிதளவு (தாளிக்க)
 கடுகு	-	சிறிதளவு
 துவரம் பருப்பு	-	1 தேக்கரண்டி
 கறிவேப்பிலை	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, தக்காளி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலவையைக் கொதிக்க விடவும். அதில் வெந்த துவரம் பருப்பு சேர்த்து, தண்ணீர் 1 கிண்ணம் ஊற்றவும். கடுகு தாளித்து, ஒரு கொதி வந்தபின் இறக்கவும். பருப்பு இல்லாமலும் செய்யலாம்.
 
 - லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா
 |