| 2009 ஏப்ரல் 3-5 தேதிகளில் இந்திய நுண்கலைக் கழகம், சான் டியேகோ  (Indian Fine Arts Academy of Sandiego) ஒரு இந்திய இசை, நடன விழாவை ல ஹோயா உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடத்தவிருக்கிறது. இதில் 27 கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்குவர். இவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியாவிலிருந்து வரவிருக்கின்றனர். 
 மார்ச் 22க்குள் நுழைவுச் சீட்டுகள் வாங்குவோருக்குச் சலுகை விலையில் கிடைக்கும்.
 
 சீட்டுகளை வாங்க:  PayPal
 
 அதுமட்டுமல்லாமல், விழா நடக்கும் மூன்று நாட்களும் அரங்க வளாகத்தில் இந்தியாவின் பிராந்திய உணவு வகைகள் கிடைக்கும்.
 
 அமெரிக்காவின் மேற்குக் கரையில் நடைபெறும் மிகப் பெரிய இந்திய இசை நடன விழா இதுவாகும். இந்த மூன்று நாள் விழாவில் 4000 பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 |