தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம்	-	4  புளி	-	எலுமிச்சங்காய் அளவு தக்காளி	-	4 பச்சை மிளகாய்	-	4 கறிவேப்பிலை	-	சிறிதளவு கடுகு	-	1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்	-	1 மேசைக்கரண்டி தேங்காய்	-	1/2 மூடி சோம்பு	-	1 மேசைக்கரண்டி எண்ணெய்	-	தாளிக்க
  செய்முறை வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கடுகு தாளித்து வதக்கவும். பின் வேண்டிய காய்களைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் கலந்து, புளியைக் கரைத்து விடவும். குழம்பு பதம் வந்த பிறகு கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை, தாளித்துத் தேங்காயை அரைத்து விடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் செய்துள்ள அளவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
  லலிதா பாஸ்கரன், வெஸ்த் வெர்ஜீனியா |