தேவையான பொருட்கள் கோதுமை மாவு	-	2 கிண்ணம் வெந்தயக் கீரை (பொடியாக  நறுக்கியது)	-	1/2 கிண்ணம் மிளகாய்ப்பொடி	-	1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்	-	சிறிதளவு பெருங்காயம்	-	1/2 தேக்கரண்டி தயிர்	-	2 தேக்கரண்டி உப்பு	-	தேவைக்கேற்ப நெய்	-	4 தேக்கரண்டி
  செய்முறை வெந்தயக் கீரையை உப்பு பிசறிப் பத்து நிமிடம் வைக்கவும். கோதுமை மாவை உப்புப் போட்டு நெய், தயிர், மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய்ப் பொடி எல்லாம் போட்டு, பிசையும்போது கீரையை ஒட்டப் பிழிந்து போட்டுச் சேர்த்துப் பிசையவும். பிறகு சிறு உருண்டைகளாக்கிச் சப்பாத்தியாக இடவும். தோசைக்கல்லில் போட்டு நிதானமாக அடுப்பை எரிய விட்டு பராத்தாவைச் சுற்றி நெய் விட்டு நன்கு வெந்ததும் எடுத்து வைக்கவும். தேவையானால் மேலேயும் நெய் தடவிச் சாப்பிடலாம்.
  தங்கம் ராமசாமி |