| தேவையான பொருட்கள் 
 கோஃப்தா செய்ய:
 மஞ்சள் உருளைக் கிழங்கு (பெரியது) - 2
 பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்
 வெள்ளை ரொட்டித் துண்டு - 2
 மிளகாய் - 1
 இஞ்சி அரைத்த விழுது - 1/2 மேசைக்கரண்டி
 பாதா, முந்திரி, பிஸ்தா - 3 மேசைக்கரண்டி 		(ஒவ்வொன்றும்)
 உலர்ந்த திராட்சை - 5-6
 மிளகாய்த் தூள் - 1/2 மேசைக்கரண்டி
 தனியாத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
 மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 
 குருமா செய்ய:
 பெரிய வெங்காயம் - 1
 பெரிய தக்காளி - 1
 தேங்காய்ப்பால் - 1/2 கிண்ணம்
 துருவிய தேங்காய் - 1/4 கிண்ணம்
 கசகசா - 1/2 தேக்கரண்டி
 பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
 மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 1 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 4
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை:
 
 கோஃப்தா
 உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து அரைத்துக் கொள்ளவும். இவற்றுடன் ரொட்டியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலந்து கொள்ளவும். அத்துடன் தனியா, மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு கலந்து, சிறுசிறு உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
 குருமா:
 பாத்திரத்தில் எண்ணெய் சிறிது விட்டு பெருஞ்சீரகத்தைத் தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதைப் போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் கசகசா சேர்த்து அரைக்கவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 
 பரிமாறும்போது குருமாவுடன் கோஃப்தா சேர்த்து பரிமாறவும். இட்லி, நான், ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றிற்குத் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
 
 சுரேஷ் சங்கரலிங்கம்
 தமிழாக்கம்: ஜெயந்தி ஸ்ரீதர், சாக்ரமெண்டோ (கலி.)
 |