| தேவையான பொருட்கள் கீரை	-	2 கிண்ணம்
 பாசிப் பருப்பு	-	1 கிண்ணம்
 தேங்காய்த் துருவல்	-	1/2 கிண்ணம்
 மிளகு	-	1/2 தேக்கரண்டி
 மிளகாய் வற்றல்	-	6
 உளுத்தம் பருப்பு	-	3 தேக்கரண்டி
 அரிசி	-	1 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 கடுகு	-	1 தேக்கரண்டி
 சீரகம்	-	1 தேக்கரண்டி
 எண்ணெய்	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 மஞ்சள் பொடி	-	சிறிதளவு
 
 செய்முறை
 கீரையை கழுவிப் பொடியாக நறுக்கி உப்புப் போட்டு வேகவிட்டு மசிக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய், பெருங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பு, மஞ்சள் பொடி போட்டு, வேகவிட்ட கீரையுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். இறக்கி வைத்துக் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறி வேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். கூட்டு தயார்.
 
 தங்கம் ராமசாமி
 |