| தேவையான பொருட்கள் கீரை	-	2 கட்டு
 துவரம் பருப்பு	-	1/2 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	5 (அ) 6
 எலுமிச்சம் பழம்	-	1/2 மூடி
 தேங்காய்த் துருவல்	-	1/2 கிண்ணம்
 கடுகு	-	1 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	1 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 எண்ணெய்	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கீரையைக் கழுவி, பொடியாய் நறுக்கி, உப்புச் சேர்த்து வேகவிடவும். துவரம் பருப்பை வேகவைத்துப் போடவும். பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, தேங்காய் வறுத்துப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலையைப் போடவும். எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும்.
 
 இதை தேங்காய் போடாமலும் செய்யலாம். கருவடகம் வறுத்தும் போடலாம். இதுவும் சுவையான கூட்டு. அசட்டுக் கூட்டு என்றும் சொல்லுவர். எலுமிச்சம் பழத்திற்குப் பதில் லேசாகப் புளிவிட்டும் செய்யலாம்.
 
 தங்கம் ராமசாமி
 |