| தேவையான பொருட்கள் கீரை	        - 2 கட்டு
 துவரம் பருப்பு	- 2(அ)3 தேக்கரண்டி
 மிளகாய் வற்றல்	- 5
 சீரகம்	-	1 தேக்கரண்டி
 தேங்காய்த் துருவல்	- 1/2 கிண்ணம்
 தயிர்	-	1 கிண்ணம்
 கடுகு	-	1 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	1 தேக்கரண்டி
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 எண்ணெய்	-	சிறிதளவு
 மோர்மிளகாய்	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கீரையை கழுவி, பொடியாய் நறுக்கி, உப்புப் போட்டு வேகவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். துவரம் பருப்பை ஊறவிட்டு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து விழுதைப் போட்டுக் கலக்கிக் கீரையில் சேர்த்து ஒரு கொதி விடவும். நீர்க்க இருந்தால் துளி அரிசிமாவு கரைத்து ஊற்றலாம். இறக்கி வைத்துக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
 
 மோர்மிளகாய் சேர்த்தும் தாளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் தாளித்தால் வாசனை அதிகமாக இருக்கும். மோர் மிளகாயை அதிகம் தாளிப்பதானால், மிளகாய் வற்றலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது மிகச் சுவையான கூட்டு.
 
 தங்கம் ராமசாமி
 |