| தேவையான பொருட்கள் கீரை	-	2 கட்டு
 மிளகாய் வற்றல்	-	4
 சீரகம்	-	1 தேக்கரண்டி
 கடுகு	-	1 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	2 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 மோர்மிளகாய்	-	3
 எண்ணெய்	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பும், சீரகமும் போட்டு நன்கு வேகவிடவும். ஒன்றுசேர மத்தால் கடைந்துகொள்ளவும். அடுப்பிலிருந்து இறக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்துத் தாளிக்கவும்.
 
 மோர்மிளகாய் சேர்த்தும் தாளிக்கலாம். சுவை கூடுதலாக இருக்கும். கீரையில் நீர் அதிகம் இருந்தால், சிறிது அரிசிமாவு கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும்.
 
 தங்கம் ராமசாமி
 |