| ஜூன் முதல் தேதி தொடங்கி ஜூலை மாத இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தருகிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் அம்மா' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். இவரது தரிசனம் பலருக்கு வாழ்வின் திருப்புமுனையாக அமைந்துள்ளது. 
 மே 2, 2006 அன்று நியூ யார்க்கின் பன்மத மையத்தினர் (www.interfaithcenter.org) அம்மாவின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டும் வகையில் 'ஜேம்ஸ் பார்க்ஸ் மார்டன் இன்டர்ஃபெய்த்' விருதை அம்மாவுக்கு வழங்கினார்கள்.
 
 அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
 
 இடம்		நாள்
 சியாடல்		06.01 - 06.04
 வளைகுடாப் பகுதி	06.06 - 06.18
 லாஸ் ஏஞ்சலஸ்	06.20 - 06.24
 நியூ மெக்சிகோ	06.26 - 06.30
 டாலஸ்		07.02 - 07.03
 சிகாகோ		07.05 - 07.06
 மவுண்ட் பிளசன்ட்	07.08 - 07.09
 வாஷிங்டன் டி.சி.	07.11 - 07.12
 நியூ யார்க்		07.14 - 07.16
 பாஸ்டன்		07.18 - 07.21
 
 கனடா:
 டொரன்டோ 	07.23 - 07.26
 
 இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில் ஆன்மீக வகுப்பு, சேவை, அம்மாவோடு உரையாடல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியன இடம்பெறும்.
 
 மேலும் விபரங்களுக்கு:
 www.amma.org
 
 சூப்பர் சுதாகர்
 |