| தேவையான பொருட்கள் 
 பயத்தம் பருப்பு	-	1 1/2 கிண்ணம்
 வெல்லம்	-	1 கிண்ணம்
 தேங்காய்த் துருவல்	-	1 கிண்ணம்
 ஏலக்காய்	-	4
 மைதா மாவு (அல்லது)
 உளுத்தம் மாவு	-	1/2 கிண்ணம்
 நெய்	-	சிறிதளவு
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 
 பயத்தம்பருப்பை லேசாக வறுத்து அரை வேக்காடு வெந்தவுடன் எடுத்து மசித்து வெல்லம் தேங்காயுடன் பூரணம் கெட்டி யாகச் செய்துகொள்ளவும். அதில் ஏலக் காய்ப் பொடி போட்டு சிறு உருண்டை களாக்கி வைத்துக் கொள்ளவும்.
 
 மைதாவை ஒரு சிட்டிகை உப்புப் போட்டுத் தண்ணீர் விட்டு ரொம்ப கெட்டியாக இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். மேற் சொன்ன உருண்டையை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துச் சாப்பிடலாம்.
 
 மைதாவுக்கு பதில் உளுத்தம்பருப்பை ஊற வைத்து நைசாக இட்லிமாவு போல் அரைத்து சிறிது உப்புப் போட்டு அதில் முக்கியும் போடலாம். வெகு சுவையாக இருக்கும்.
 
 தங்கம் ராமசாமி
 |