| தேவையான பொருட்கள் 
 தேங்காய்த் துருவல்	-	2 கிண்ணம்
 வெல்லம்	-	1 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	6
 உருளைக் கிழங்கு (வெந்து மைய அரைத்தது)	-	2 கிண்ணம்
 மாதுளை முத்து	-	1/2 கிண்ணம்
 எள்ளு	-	2 தேக்கரண்டி
 கொத்துமல்லி, கறிவேப்பிலை
 உப்பு	-	1 தேக்கரண்டி
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 
 தேங்காயுடன் வெல்லம், பச்சை மிளகாய், எள்ளு சேர்த்துப் பூரணம் செய்து கொள்ளவும். கொத்துமல்லி கருவேப்பிலை கலந்து லேசாகப் உப்பும் போட்டு மாதுளை முத்து நசுங்காமல் கலந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
 
 அரைத்த உருளைக்கிழங்கைத் துளி உப்பு சேர்த்து நெய் தொட்டுக் கொண்டு சிறு கிண்ணம் போல் செப்பு செய்துகொள்ளவும். அதற்குள் உருட்டிய பூரணம் வைத்து நன்றாக மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 
 இது மிகவும் சுவையான ஒரு ஸ்வீட் போண்டா.
 
 தங்கம் ராமசாமி
 |