| தேவையான பொருட்கள் 
 ரொட்டித் துண்டுகள்	-	3
 உருளைக்கிழங்கு
 (வெந்து மசித்தது)	-	2 கிண்ணம்
 காரட் துருவல்	-	1/4 கிண்ணம்
 வெங்காயம்	-	1 கிண்ணம்
 பட்டாணி	-	1/4 கிண்ணம்
 கடலைமாவு	-	2 கிண்ணம்
 அரிசி மாவு	-	1/2 கிண்ணம்
 எண்ணெய்	-	பொரிக்க
 மசாலா பொடி	-	1 தேக்கரண்டி
 மஞ்சள்பொடி	-	1 தேக்கரண்டி
 மிளகாய்ப் பொடி	-	1 மேசைக்கரண்டி (அல்லது)
 பச்சை மிளகாய்	-	7
 உப்பு	-	தேவைக்கேற்ப, கொத்துமல்லி, கறிவேப்பிலை
 
 செய்முறை
 
 பிரெட் துண்டுகளை வெந்நீரில் முக்கிப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். உருளை, காரட், வெங்காயம், பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, உப்பு, மசாலாத் தூள் எல்லாவற்றையும் பிரெட்டுடன் கலந்து பிசைந்து கொள்ளவும்.
 
 கடலை மாவு அரிசி மாவைக் கெட்டியாகச் சிறிது உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட் கலவை உருண்டையை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
 
 சாம்பார், சட்னியுடன் ஒரு பிடி பிடிக்கலாம்.
 
 தங்கம் ராமசாமி
 |