| தேவையான பொருட்கள் 
 கடலைமாவு	-	2 கிண்ணம்
 அரிசி மாவு	-	1 கிண்ணம்
 வெங்காயம்
 (நறுக்கியது)	-	1 கிண்ணம்
 நெய்	-	1/2 கிண்ணம்
 உப்பு	-	தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை	-
 கொத்துமல்லி	-
 மஞ்சள் தூள்	-	சிறிதளவு
 தேங்காய்ப் பல்	-	1/4 கிண்ணம்
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 
 கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், இஞ்சி, பொடியாய் நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு லேசாக வறுத்த முந்திரிப் பருப்பு இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள், தேங்காய் போடவும். நெய் யுடன் 1 கரண்டி சுடவைத்த எண்ணெய் இவற்றையும் சிறிது தண்ணீரும் விட்டு மாவுக் கலவையைப் பிசையவும்.
 
 உருண்டையாய் உருட்டி ஒரு தட்டில் அரிசி மாவைப் பரப்பி, அதில் உருண்டை களைப் போட்டு லேசாகப் புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
 
 இது மிகவும் வெளியே கரகரப்பாகவும் உள்ளே மெத்தென்றும் இருக்கும் சுவையான போண்டா. தக்காளி சாஸ¤டன் சாப்பிடலாம்.
 
 தங்கம் ராமசாமி
 |