| தேவையான பொருட்கள் 
 கடலை மாவு	-	2 கிண்ணம்
 அரிசி மாவு	-	1 மேசைக்கரண்டி
 உருளைக்கிழங்கு
 (வெந்து மசித்தது)	-	1 கிண்ணம்
 வெங்காயம்	-	1/2 கிண்ணம்
 பீன்ஸ், குடைமிளகாய், காரட், பட்டாணி, கோஸ் மற்றும் தேவையான காய்கறிகள் (பெடியாக நறுக்கியது)
 ஒவ்வொன்றும்	-	1/4 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	7
 மிளகாய்த் தூள்	-	2 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 கடுகு	-	தாளிக்க
 முந்திரி	-	சிறிதளவு
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 
 கடலை மாவு, அரிசி மாவை உப்பு மஞ்சள் தூள் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். உருளை போண்டாவுக்குச் செய்த மாதிரி இந்தக் காய்கறிகளைப் பொரியல் செய்து உருண்டையாய் மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 
 தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் வெகு சுவை. பொரியலில் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துச் செய்யலாம்.
 
 தங்கம் ராமசாமி
 |