| உளுந்து போண்டா 
 தேவையான பொருட்கள்
 
 உளுத்தம் பருப்பு	-	2 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	6
 சிவப்பு மிளகாய்	-	4
 மிளகு		-	1 தேக்கரண்டி
 தேங்காய்த் துருவல்	-	1/4 கிண்ணம்
 வெங்காயம் (நறுக்கியது)	-	1/4 கிண்ணம்
 பெருங்காயம்	-	சிறிதளவு
 உப்பு		-	தேவைக்கேற்ப
 எண்ணெய்		-	பொரிக்க
 கறிவேப்பிலை
 
 செய்முறை
 உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, உப்பு பெருங்காயம், மிளகாய் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, தேங்காய் (பல்லுப் பல்லாய் நறுக்கியது), வெங்காயம், கறி வேப்பிலை எல்லாம் போட்டு நன்கு கலக் கவும். சிறுசிறு உருண்டைகளாய் உருட்டிப் போட்டு பொன்னிறமாய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
 
 கீரையையும் பொடியாய் நறுக்கிக் கலந்து போடலாம். சுவையான போண்டா ரெடி.
 
 தங்கம் ராமசாமி
 |