| தேவையான பொருட்கள் 
 முட்டை	-	1
 ஆலிவ் எண்ணெய்	-	சிறிதளவு
 உப்பு, மிளகுத்தூள்	-	தேவைக்கேற்ப
 வெங்காயத்தாள்	-	1
 
 செய்முறை
 
 நான்ஸ்டிக் பான் (non-stick pan) ஒன்றை மிதமான தீயில் வைத்து ஆலிவ் ஆயிலை விடவும். பின்னர் இந்த இருதய வடிவிலான குக்கீ கட்டரை, பானின் நடுவில் வைத்து அதில் முட்டைய உடைத்து விடவும். உப்பு, மிளகுத்தூளை இதன்மேல் தூவவும். குக்கீ கட்டரை அழுத்தி (பானில் கோடுகள் விழாமல்) பிடித்துக்கொள்ளவும்.
 
 முட்டை நன்றாக வெந்தவுடன் அதை மெது வாக எடுத்து தட்டில் வைக்கவும். Cupid's arrow போன்று வைக்க எண்ணினால் ஒரு வெங்காயத் தாளை எடுத்து வெந்த முட்டையின் மஞ்சள் கருவில் சற்றுச் சாய்வாகச் செருகி விடவும்.
 
 பின்குறிப்பு:
 
 இதைச் செய்யும்போது குக்கீ கட்டருக்கு வெளியில் வரும் முட்டைப் பகுதியைத் தனியாக எடுத்து வைத்துச் சாப்பிடவும். பிஸ்ஸா மாவை இருதய வடிவாக்கி பின்னர் பிஸ்ஸா செய்யலாம். ஒரு தட்டில் இருதய வடிவக் குக்கீ mould வைத்து அதனுள் உப்புமா, பாஸ்தா ஆகியவற்றைச் சூடாக இருக்கும் போது போட்டுப் பின்னர் மெதுவாக mould-ஐ எடுத்தால் அந்த வடிவில் அவை கிடைக்கும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |