| தேவையான பொருட்கள் 
 கடலை மாவு	-	1/2 கிண்ணம்
 அரிசி மாவு		-	1/2 கிண்ணம்
 மிளகாய்த்தூள்	-	2 தேக்கரண்டி
 குடைமிளகாய்	-	2
 உப்பு		-	தேவைக்கேற்ப
 எண்ணெய்		-	பொரிக்க
 சீரகம்		-	1 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 நெய்		-	2 தேக்கரண்டி
 கொத்துமல்லி
 கறிவேப்பிலை	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 
 குடைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொண்டு கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, சீரகம் எல்லாம் போட்டு, நெய்விட்டுச் சேர்த்துப் பிசையவும்.
 
 மிளகாயில் ஈரம் இருப்பதால் தண்ணீர் விட வேண்டாம். வேண்டுமானால் எண்ணெய் கொஞ்சம் விட்டுப் பிசைந்து கொள்ளலாம். எண்ணெய் காய்ந்த பின் மாவைக் கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான பக்கோடா ரெடி.
 
 தங்கம் ராமசாமி
 |