| தேவையான பொருட்கள் 
 குடைமிளகாய்	-	7
 உருளைக் கிழங்கு	-	4
 வெங்காயம்		-	3
 பச்சை மிளகாய்	-	3
 பட்டாணி		-	2 தேக்கரண்டி
 சீரகம்		-	1 தேக்கரண்டி
 மஞ்சள்தூள்		-	சிறிதளவு
 உப்பு		-	தேவைக்கேற்ப
 எண்ணெய்		-	தாளிக்க
 கடுகு		-	1 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	1 தேக்கரண்டி
 கொத்துமல்லி
 கறிவேப்பிலை	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 
 உருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்துக் கொள்ளவும். அதில் மசித்த கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கொள்ளவும். பட்டாணி, சீரகமும், தாளிக்கும் போது போடவும்.
 
 கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பொரியல் செய்து கொண்டு குடை மிளகாயைக் காம்பை நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். குடை மிளகாயின் உள்ளே பொரியலை அடைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு, இரண்டு இரண்டாகப் போட்டு மேலே மூடி வைத்து, வறுத்து எடுக்கலாம்.
 
 இல்லாவிடில் எண்ணெயை மேலாகத் தடவி நுண்ணலையில் (மைக்ரோவேவில்) வேகவிட்டும் எடுத்து சாப்பிடலாம்.
 
 இதை பிரட்டின் நடுவில் வைத்துச் சாப்பிட்டால் ருசியோ ருசி. மசாலா போட்டும் செய்து கொள்ளலாம்.
 
 தங்கம் ராமசாமி
 |