| தேவையான பொருட்கள் 
 குடைமிளகாய்	-	7
 கெட்டித்தயிர்	-	1 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	6
 சீரகம்		-	1 தேக்கரண்டி
 துவரம் பருப்பு (அ)
 கடலைப் பருப்பு	-	2 தேக்கரண்டி
 கடுகு		-	1 தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு	-	1 தேக்கரண்டி
 தேங்காய் எண்ணெய்	-	சிறிதளவு
 உப்பு		-	தேவைக்கேற்ப
 எண்ணெய்		-	தாளிக்க
 தேங்காய்த் துருவல்	-	2 தேக்கரண்டி
 கறிவேப்பிலை
 
 செய்முறை
 
 குடைமிளகாயைக் கூட்டுக்கு நறுக்குவது போல் நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, உப்புப் போட்டு வேகவிட்டுக் கொள்ளவும். பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், சீரகம், தேங்காயுடன் அரைத்துக் கொள்ளவும். இதைத் தயிருடன் சேர்த்து உப்புக் கொஞ்சம் போட்டு வேகவிட்ட குடைமிளகாய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும்.
 
 தங்கம் ராமசாமி
 |