| தேவையான பொருட்கள் : 
 எள் - 250 கிராம்
 வெல்லம் - 250 கிராம்
 ஏலக்காய் - 2
 
 செய்முறை :
 
 எள்ளை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் இட்டு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
 
 வெல்லத்தையும், ஏலக்காயையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.
 
 வறுத்த எள்ளை மிக்ஸியிலிட்டுப் பொடியாக்கிக் கொண்டு வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து கொண்டால் எள் பூரணம் தயார். மிகவும் எளிதாகத் தயாரித்து விடக் கூடிய பூரண வகை இது.
 
 நளாயினி
 |