| தேவையான பொருட்கள் 
 மைதா மாவு	-	1 கிண்ணம்
 பால்		-	1 கிண்ணம்
 சர்க்கரை		-	3 கிண்ணம்
 நெய்		-	1 கிண்ணம்
 ஏலக்காய்ப் பொடி	-	1 தேக்கரண்டி
 முந்திரிப் பருப்பு	-	8
 கேசரித் தூள்		-	சிறிதளவு
 பச்சைக் கற்பூரம்	-	சிறிதளவு
 
 செய்முறை
 
 மைதா மாவைப் பாலில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 1 மணி நேரம் ஊற விடவும்.
 
 கெட்டியான சர்க்கரைப் பாகு வைத்து வைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறவும். கிளறும் போது நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
 
 பிறகு கேசரித் தூள், ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 
 சுற்றிலும் நெய் சுருண்டு வரும்போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.
 
 பிறகு அதை வில்லைகளாகப் போடவும். அப்புறம் என்ன, எடுத்துச் சுவைக்க வேண்டியதுதான்.
 
 தங்கம் ராமசாமி
 |