| தேவையான பொருட்கள் 
 பிரெட் க்ரம்ப்ஸ்	-	1 கிண்ணம்
 பால்		-	1 கிண்ணம்
 சர்க்கரை		-	2 கிண்ணம்
 கேசரித் தூள்		-	சிறிதளவு
 ஏலக்காய்		-	6
 முந்திரிப் பருப்பு	-	8
 பச்சைக் கற்பூரம்	-	சிறிதளவு
 நெய்		-	1 கிண்ணம்
 
 செய்முறை
 
 பிரெட் க்ரம்ப்ஸைச் சிறிது நெய் விட்டு வறுத்துப் பின் பாலில் வேகவிடவும்.
 
 சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கெட்டிப் பாகு வைத்துக் கொண்டு, வேக வைத்த க்ரம்ப்ஸைப் போட்டு நெய் விட்டுக் கிளறவும்.
 
 சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடி, கேசரித் தூள், வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைப் போட்டு இறக்கவும். மணக்க மணக்க அல்வா தயார்.
 
 தங்கம் ராமசாமி
 |