| உருளைக் கிழங்கு அல்வா 
 தேவையான பொருட்கள்
 
 உருளைக் கிழங்கு	-	5
 சர்க்கரை		-	3 கிண்ணம்
 பாதாம் பருப்பு	-	8
 நெய்		-	1 1/2 கிண்ணம்
 ஏலக்காய்		-	6
 முந்திரிப் பருப்பு	-	8
 பச்சைக் கற்பூரம்	-	சிறிதளவு
 குங்குமப் பூ		-	சிறிதளவு
 கேசரித் தூள்		-	சிறிதளவு
 
 செய்முறை
 
 உருளைக் கிழங்கை வேகவிட்டுத் தோலை உரித்த பின் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
 
 பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் நீக்கி மைய அரைத்து, மசித்து வைத்திருக்கும் கிழங்கோடு சேர்க்கவும்.
 
 அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரைப் பாகு வைக்கவும். பாகு முற்றி வரும்போது மசித்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்றாகக் கிளறவும். நடுநடுவே நெய்விட்டுக் கிளறவும்.
 
 பாத்திரத்தில் ஒட்டாமல் சேர்ந்து வரும்போது கீழே இறக்கவும். இதில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், கேசரித் தூள், குங்குமப் பூ ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 
 ம்ம்ம்... சுவையான உருளைக் கிழங்கு அல்வா தயார்.
 
 தங்கம் ராமசாமி
 |