| வல்லரச நாடென்று வையத்தே வலம்வந்த அமெரிக்க நாட்டின்நிலை இன்றென்ன வாயிற்று?!
 ஆ¨னைக்கும் அடிசறுக்கும் என்பதுமெய் ஆயிற்றே
 மதவாதி மிதவாதி போன்ற பல வாதிகளில்
 தீவிர வாதிகளின் சதித்திட்டம் உலகத்தைப்
 பக்கவாதப் பள்ளத்தில் வீழ்த்திவிட்டதோ !! தையகோ!!
 பழிஒருபக்கம் பாவமொருபக்கம் என்பர் சான்றோர்
 சதிகாரர் கெக்கலிக்க அப்பாவி மக்களுந்தான்
 ஆயிர மாயிரம் கனவில்வெந்து கருகினரே
 இயேசு புத்தர் காந்தி லூதர்
 போன்றோரில் ஒருவரேனும் இன்றைக் இருந்திருப்பின்
 தீவிர வாதத்தைத் திருத்தியே இவ்வுலகை
 மீட்டிட வாய்ப்பும் இருந்திருக்கக் கூடுமே
 இயற்கையின் சீற்றமென்று கூறவும் வழியில்லை
 இயற்கையின் நியதியைக் கடந்தவோர் அரக்கத்தனம்
 இனியுந்நேரா வண்ணம் நாம் ஒன்றாயிணைந்து செயல்படுவோம்
 
 டாக்டர். அலர்மேலு ரிஷி
 |