| தேவையான பொருட்கள் 
 பாகற்காய்	-		1/2 பவுண்டு
 தேங்காய் தூள்	-	1 கரண்டி
 வெந்த துவரம் பருப்பு	-	1/2 கரண்டி
 மஞ்சள் பொடி	-	1/2 ஸ்பூன்
 மிளகாய் வற்றல்	-	1
 உளுத்தம் பருப்பு	-	1 ஸ்பூன்
 கடுகு		-	1/2 ஸ்பூன்
 புளித் தண்ணீர்	-	2 ஸ்பூன்
 வெல்லத் தூள்	-	2 ஸ்பூன்
 உப்பு		-	சிறிதளவு
 
 செய்முறை
 
 பாகற்காயில் உள்ள முற்றிய விதைகளை நீக்கிவிட்டு 1 அங்குல அளவுக்கு நறுக்கவும்.  (இளசான விதையாக இருந்தால் நீக்க வேண்டாம்) பாத்திரத்தில் 1/2 கரண்டி நீர் விட்டு கொதித்ததும் நறுக்கிய பாகற்காய், புளி ஜலம், உப்பு, மஞ்சள் பொடி இவற்றை போட்டு நிதானமாக எரியும் அடுப்பில் 5 நிமிடம் வேக விடவும்.  பிறகு வெல்லத் தூள், தேங்காய்த் தூள், வெந்த துவரம் பரப்பு இவற்றை போடவும்.  கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை தாளித்து கிளறி இறக்கவும்.
 
 இந்திரா காசிநாதன்
 |