| தமிழ்ல பேசலாம் வாங்க! என்று தமிழ் பேசும் மற்றும் தமிழ் பேச விரும்பும் சமூகத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது www.talktamil.4t.com இணையத்தளம். எழுத்துத் தமிழ் மற்றும் பேச்சுத் தமிழ் எனும் இருபெரும் வழக்கில் இந்த இணையத் தளம் பேச்சுத் தமிழுக்கான அடித் தளத்தை அமைத்துத் தரும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
 "பயணம் செய்பவர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ்ப் பேசும் நிலப் பகுதிகளுக்குள் நுழைகின்ற போது அவர்கள் அங்குள்ள மக்களிடம் எளிதா கத் தமிழிலிலேயே தொடர்பு கொள்ளும் வகையில் இந்த இணையத் தளம் தமிழ் பேசக் கற்றுத் தருகிறது. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுதிகளும் வெவ்வேறு வகையான வட்டார உச்சரிப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து வட்டார உச்சரிப்புக்களையும் கற்றுத் தருவது என்பது சாத்தியமாகயில்லை என்கிற காரணத்தால், இந்த இணையத் தளத்தில் பொதுத் தமிழ் உச்சரிப்பு முறையைக் கற்றுத் தருவதை மேற்கொண்டிருக்கிறோம்" என்று இந்த இணையத் தளத்தின் தோற்ற நோக்கம் குறித்துக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
 
 ஒரு பேச்சு மொழியைக் கற்றுக் கொள்ளும் போது வாழ்த்துக்கள் தெரிவிப்பதிலிருந்து ஆரம்பிப்பர். அதன்படியே இந்த இணையத் தளத்திலும் அவ்வாறே ஆரம்பித்திருக்கிறார்கள். வணக்கம், வாங்க வாங்க, என்னோட, பேர் என்ன?, சொல்லுங்க... என்று அடிப்படையான விசயங்களை ஆங்கில எழுத்துக்கு நேர் எதிராக ஆங்கில வரிவடிவத்தில் (தமிழ் உச்சரிப்பு) குறிப்பிட்டு விளக்கியிருப்பது கற்றுக் கொள் பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
 
 வெறும் வார்த்தைகள் என்று மட்டும் நின்று விடாமல் பொருள் பொதிந்த தொடர்களையும் இணையத்தளத்தில் இடம்பெறச் செய்து கற்றுக் கொள்பவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணி யிருக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைத் தொடர்களுக்குமான ஒலி வடிவம் மற்றும் வரிவடிவம் தந்திருப்பது கூடுதல் தனிச் சிறப்பு.
 
 வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வது, சாப்பாடு மற்றும் அது சார்ந்த விஷயங்கள், காலம் மற்றும் நேரம் குறித்த உரையாடல்கள், சமூகத்தில் ஊடாடும் வகையிலான உரையாடல்கள், நுகர்வோருக்கான உரையாடல்கள், அவசர காலங்களுக்கான உரையாடல்கள், அடிப்படை இலக்கண விதிமுறைகள்... எனவான தலைப்பு களின் கீழ் இந்த இணையத் தளம் பேச்சுத் தமிழைக் கற்றுத் தருகிறது.
 
 சாப்பாடு மற்றும் அது சார்ந்த தகவல்கள் என்று வரும் போது தமிழர்களுடைய உணவு நடை முறைகள் பற்றிய விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு உணவு வகை களுக்கான தமிழ்ப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடலைக் கற்றுத் தரவும் செய்கிறார்கள். தமிழ்ச் சினிமா பாடல்களை ஒலி வடிவத்திலும் வரிவடிவத்திலும் முழுமை யாகக் கொடுத்தும் தமிழ் பேசக் கற்றுக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்கள்.
 
 குழந்தைகளுக்கான தமிழ் கதைகள் மற்றும் தமிழ் குழந்தைகள் பாடல்களையும் வரிவடிவம் மற்றும் ஒலி வடிவத்தில் இங்கு இடம் பெறச் செய்திருக்கிறார்கள். இங்குள்ள ஒலிவடிவங் களை எளிதாக பயன்படுத்துபவர்கள் தங்க ளுடைய கணினியில் இறக்கிக் கொள்ளும் வகையிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.
 
 வெளிநாடுவாழ் தமிழர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தம்முடைய தாய்மொழியான தமிழைக் கற்றுத் தருவதற்கு இந்த இணையத் தளம் பேருதவி செய்யும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் மற்ற மொழி பேசுபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள விரும்பினால், இந்தத் தளத் தைச் சிபாரிசு செய்யலாம்.
 
 உதாரணத்திற்கு www.talktamil.4t.com இணையத் தளத்திலிருந்து சில பகுதிகள்.
 
 I will eat 				-	Naan Saa-pi-duv-eaan
 I will not eat 			-	Naan saa-pe-da-maatean
 I will not go			-	Naan poo-ga maa-tean
 I went to the movie 		-	Naan pa-da-thu-ku poo-neaan
 I did not go to the movie 		-	Naan pa-da-thu-ku po-ga-vil-lai
 We will come to your house		-	Naanga unga vie-tu-ku va-ru-veaan
 Hello, welcome 			-	Vanakam, vaanga vaanga
 How are you? 			-	Epadi irukienga?
 I am fine. How about you? 		-	Nan nallaa irukeanga, neenga peadi irukeinga?
 Can you repeat? 			-	Marupadium solla mudiungala?
 Sapaadu 				-	(Sa-paa-du) Rice
 Sambar				-	(Sa-am-bar) soup made of lentils, vegetables and tamarind.
 Kolambu 				-	(Ko-lam-bu) thick soup made of lentils, vegetables or meat and tamarind
 Rasam				-	(Ra-sa-m) thin, peppery, tamarind soup
 Kaai				-	(Kaa-i) vegetable
 Kuuttu 				-	(Kuu-tu) assorted vegetables
 Thair				-	(Tha-ir) plain yogurt
 Moor 				-	(Moo-r) yogurt in water, chilies and herbs
 Can I make a call? 			-	Oru phone panni kalangala?
 Do you have a phone directory 	-	Phone puthakam irukungala?
 I dont know to read Tamil 		-	Eanaku Tamil padika theriyathu
 Hello, is Mr Ponniyan there? 		-	Hello, Ponniyan irukarungala?
 I am Fatima speaking 		-	Naan Fatima peaasareaanga
 Who is this speaking? 		-	Neenga yaru peaasarathunga?
 Can you speak slowly? 		-	Meathuva peaasa mudiungala?
 Ro-sa puu chin-na ro-sa puu 	-	Rose flower little rose flower,
 un pee-ra sol-lum ro-sa pu 		-	a rose flower which says my name,
 kaa-thil aa-dum tha-ni-yaa-ka 	- 	swaying in the breeze alone,
 unn paa-tuu mat-tum thu-nai-yaa-ka 	- with only your songs for a companion
 |