| தேவையான பொருட்கள் 
 பன்னீர்		-	250 கிராம்
 வெங்காயம்		-	3
 தக்காளி (பெரியது)	-	3
 இஞ்சி விழுது	-	1 டேபிள் ஸ்பூன்
 பூண்டு விழுது	-	1 டேபிள் ஸ்பூன்
 பச்சைமிளகாய்	-	3
 முழு முந்திரி பருப்பு	-	10
 பாதம் பருப்பு	-	10
 உலர்ந்த வேர்கடலை	-	5
 மிளகாய் பொடி	-	1 டேபிள் ஸ்பூன்
 கரம்மசாலா		-	1/2 கிண்ணம்
 பெருங்காய பவுடர்	-	1/4 ஸ்பூன்
 பட்டை (தூள் செய்தது)	-	1/4 டேபிள் ஸ்பூன்
 உப்பு 		-	தேவையான அளவு
 பச்சை கொத்தமல்லி	-	(பொடியாக நறுக்கியது) கையளவு
 
 செய்முறை
 
 1. பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வறுக்கவும். (பன்னீர் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்)
 
 பிறகு இதை தனியாக வைக்கவும்.
 
 பருப்புகளை மைபோல் நன்றாக மிக்ஸியில் அரைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 
 கனமான அடி உள்ள வாணலியில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
 
 தக்காளி சாற்றை இத்துடன் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் வேக வைக்கவும்.
 
 இதன் பிறகு வெந்துகொண்டிருக்கும் தக்காளி, வெங்காயத்துடன் அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய கலவையை சேர்க்கவும்.
 
 எண்ணெய் நன்றாக கொதித்து வரும்வரை நன்றாக வேகவைக்கவும்.
 
 இந்த பதம் வந்தவுடன் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, பட்டை தூள், பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
 
 அரைத்து வைத்திருக்கும் பாதாம் பருப்பு, வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.
 
 இந்த நிலையில் தேவைக்கேற்றவாறு நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இதில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கவும்.
 
 பிறகு இதை கீழே இறக்கிவைத்து அதன் மேல் கொத்தமல்லியை தூவி அழகு செய்யலாம்.
 
 இப்போது பன்னீர் கிரேவி ரெடி.
 
 இது சப்பாத்தி, நாண், பூரி, பரோட்டா மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்கு நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |